Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ இந்த 6ஐ மனசுல வச்சுக்கோங்க!

 இந்த 6ஐ மனசுல வச்சுக்கோங்க!

 இந்த 6ஐ மனசுல வச்சுக்கோங்க!

 இந்த 6ஐ மனசுல வச்சுக்கோங்க!

ADDED : பிப் 07, 2026 08:17 AM


Google News
Latest Tamil News
கோவையை சேர்ந்தவர், கால்நடை மருத்துவர் ரமேஷ். கால்நடைகளுக்கான உடற்செயலியியல் துறையில் (Veterinary Physiology) முனைவர் பட்டம் பெற்றவர். செல்லப்பிராணிகளுக்கு வயது முதிர்வால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இவர் நம்மிடம் பகிர்ந்தவை:

செல்லப்பிராணிகள் இனத்திற்கு ஏற்ப, சராசரி ஆயுட்காலம் மாறுபடும். சிறிய இன நாய்களுக்கு பிறந்து 11 வயதிலும், பெரிய இன நாய்களுக்கு 8 வயதிலும், 'ஜீரியாட்டிக் டிசீஸ்' எனும் வயது முதிர்வு நோய்களின் அறிகுறிகள் துவங்க ஆரம்பிக்கும்.

அவைகளில் குறிப்பிடத்தக்கவை இதோ:

இயங்கும் திறன் (Mobility) வழக்கத்தை விட குறைவான துாரம் நடப்பது, எளிதில் சோர்வடைவது, மாடிப்படிகளில் ஏற முடியாத நிலை, அசைந்து அசைந்து நடப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், அவற்றிற்கு இடுப்புப்பகுதியில் மூட்டு நோய், இருதய நோய், ஹார்மோன் சுரப்பு மாறுபடுதல் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடும்.

பல் சார்ந்த நோய்கள்

ஐந்து வயதுக்கு மேற்பட்ட நாய்களுக்கு, பல் மீது கறுப்பாக கரை படிதல், அதிகளவில் உமிழ்நீர் வெளியேறுதல், வாயின் உட்பகுதியில் கட்டிகள் இருப்பது, வாய் துர்நாற்றம் போன்ற அறிகுறிகள் பல் சார்ந்த நோய்கள் இருப்பதைஉணர்த்துகிறது. இதில் அலட்சியம் காட்டினால், நோய் பாதிப்பு தீவிரமடையும்.

எடை மாறுபாடு

கல்லீரலில் கொழுப்பு படிதல், சர்க்கரை நோய், தைராய்டு சுரப்பு குறைவது போன்றவை உடல்எடை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய நோய்கள். இதேபோல, உடல்எடை, மாதந்தோறும் 5 சதவீதம் வரை குறைந்தால் பல் கோளாறுகள் மற்றும் உணவு மாறுபாடு காரணியாக அமையக்கூடும். 10 சதவீதம் வரை குறைந்தால், உடல் உறுப்புகளில் கோளாறு, 20 சதவீதம் வரை குறைந்தால், குடல் சார்ந்த கோளாறு மற்றும் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு,கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

பழக்கவழக்க மாற்றம்

'கெனைன் காக்னடிவ் டிஸார்டர்' என்ற மறதி நோய், வயது முதிர்வின் ஒரு விளைவு. வழக்கத்தை விட பகலில் அதிக நேரம் துாங்குதல், ஒரே இடத்தை உற்று பார்த்து கொண்டிருத்தல், 'அக்ரசிவ்வாக' இருப்பது, வீட்டில் உள்ள பொருட்களை மாற்றி வைத்தால் குழப்பமடைதல் போன்ற அறிகுறிகளால், இதை உறுதி செய்யலாம்.

உணவு உட்கொள்ளல், கழிவு வெளியேற்றம் செல்லப்பிராணிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமான தண்ணீர் குடிப்பதோடு, அதிகமான அல்லது சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேற்றுதல் போன்றவை சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. இதோடு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, போன்ற அறிகுறிகளும், சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறிகளாகும்.

தோல் பராமரிப்பு

தோலின் மேற்புறத்தில் சிறியதாக கொழுப்பு கட்டி, 'மரு'போன்றவை வயது முதிர்வில் சாதாரணமாக ஏற்படக்கூடியது தான். ஆனால், அக்கட்டி பெரிதாகி கொண்டே இருந்தால், அது புற்றுநோயாக இருக்கலாம்.

அலட்சியம் கூடாது

மேற்சொன்ன இந்த ஆறு வகையான நோய் அறிகுறிகளையும் ஆரம்பக்கட்டத்திலே கண்டறிந்து முறையான சிகிச்சைக்கு உட்படுத்துவது அவசியம். ஆறு மாதத்திற்கு அல்லது ஆண்டுக்கு ஒருமுறையாவது, உங்கள் நாய்களுக்கு, ரத்த பரிசோதனை செய்து உடல்நிலை அறிவது நல்லது.

சிறுநீரகம், கல்லீரலின் இயக்கத்தை அறிய, 'சீரம் பயோ-கெமிஸ்ட்ரி' பரிசோதனை, ஹார்மோன் சுரப்பின் நிலை அறிய 'தைராக்சின்' பரிசோதனை, வயிறு மற்றும் நெஞ்சு பகுதிக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவை வயது முதிர்வு நோய்கள் வருவதை முன்னதாக கண்டறிய உதவும். கால்நடை மருத்துவரின் இந்த ஆலோசனைகளை பின்பற்றினாலே, உங்கள் நாய் முதுமை நோய்களை வென்று ஆரோக்கியமாக இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us