தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/செல்லமே/பாம்பும் பாசத்துக்குரியதே! 2கே கிட்ஸ் விருப்பம் 

பாம்பும் பாசத்துக்குரியதே! 2கே கிட்ஸ் விருப்பம் 

பாம்பும் பாசத்துக்குரியதே! 2கே கிட்ஸ் விருப்பம் 


ADDED : ஜூன் 22, 2025 11:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 11:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''படையப்பா படத்தில், மவுத் ஆர்கன் வாசித்ததும் புற்றில் இருந்து வெளியே தலைநீட்டும் பாம்புக்கு, நடிகர் ரஜினிகாந்த் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். இந்த பைத்தான் வகை பாம்புகள், மவுத் ஆர்கன் வாசிக்காமலே, கை மீது ஏறி விளையாடும்,'' என்கிறார், கோவையை சேர்ந்த, 'தி பெட் ஷாப்' உரிமையாளர் ஆதித்யன்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சான்றிதழ் பெற்று, எக்ஸாடிக் செல்லப்பிராணிகளை விற்கும் இவர், பைத்தான் பாம்புகள் பற்றி நம்மிடம் பகிர்ந்தவை:

ஊர்வன வகை செல்லப்பிராணிகளில், தற்போது 2 கே கிட்ஸ் பெரிதும் விரும்புவது பைத்தான் வகை பாம்புகளை தான். இவை, கடித்தால் விஷம் ஏறாது. குட்டியாக இருக்கும் போதே வளர்த்தால், உங்களோடு விளையாட துவங்கிவிடும்.

மீன் தொட்டி, கண்ணாடி கூண்டில் இதை வளர்க்கலாம். இவை மறைவான இடத்திலே உறங்கும் என்பதால், கூண்டை அதற்கேற்ப வடிவமைக்க வேண்டும். திறந்தவெளியில் சிறிது நேரம் விட்டாலும், மீண்டும் கூண்டிற்குள் வைப்பதே நல்லது.

பைத்தானில், 40 வகை பாம்புகள் இருந்தாலும், ஒரு சில வகை பைத்தான் பாம்புகளையே விரும்பி வளர்கின்றனர். இவை பெரும்பாலும், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆசியாவில் காணப்படுகிறது. இந்தியாவில், வட மாநிலங்களில், பைத்தான் முறையாக அனுமதி பெற்று இனப்பெருக்கம் செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

என்னிடம் தற்போது இருப்பது பேஸ்டல் பைத்தான். இது, 6-8 அடி நீளம் வரை வளரும். பொதுவாக இவை பிறக்கும் போதே, 100-150 பற்கள் இருக்கும். அவை பின்னோக்கி வளைந்திருப்பதால் தான், எதையாவது கடித்தால் உடனே உள்தள்ளி விழுங்கிவிடுகிறது.

இவற்றில், ஆண் பாம்பு 900 கிராமிற்கும் மேல், பெண் பாம்பாக இருந்தால் 1,400 கிராம் எடைக்கும் மேல், இருந்தால், அவை பதின்பருவத்தை அடைந்துவிட்டதை அறியலாம். இதற்கு பின், பாம்பின் உடல் வளர்ச்சி நிலைகளில், சில மாற்றங்களை காண முடியும்.

இவை பொதுவாக, உயிருள்ளவற்றை மட்டுமே சாப்பிடும். குட்டி எலியை இருநாட்களுக்கு ஒருமுறை உணவாக கொடுத்தால் போதுமானது. பாம்பின் வயதுக்கேற்ப, எலியின் வயதும் இருப்பது அவசியம். சிறிய வகை பாம்புக்கு பெரிய எலியை உணவாக கொடுக்கும் பட்சத்தில், அந்த எலி பாம்பின் வாய் பகுதியில் கடிக்க நேரிடலாம். அவ்வாறு நிகழ்ந்தால், பாம்பு இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இதேபோல, ஒவ்வொரு வகை பாம்புக்கும் ஏற்ப, அதன் உணவு முறைகள் மாறுபடும். இதை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவெடுத்தால், ப்ரீடரிடம் உணவு, வாழ்வியல் மாற்றங்கள் குறித்த சந்தேகங்களை கேட்டறிவது அவசியம்.

பாம்பு வகைகளை வளர்க்கும் முன்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் (parivesh.nic.in) விண்ணப்பித்து, சான்றிதழ் பெற வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us