Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ கீச்சிட்டு கொஞ்சும் மனம் நெகிழ கெஞ்சும்

 கீச்சிட்டு கொஞ்சும் மனம் நெகிழ கெஞ்சும்

 கீச்சிட்டு கொஞ்சும் மனம் நெகிழ கெஞ்சும்

1


ADDED : மே 23, 2026 07:51 AM

Follow on Google

ADDED : மே 23, 2026 07:51 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழலையின் மாயாஜலத்தையும், சுட்டித்தனத்தையும் அப்படியே வீட்டிற்குள் பிரதிபலிப்பதே, காலா காக்கட்டூ பறவையின் தனித்துவம் என்கிறார் கோவையை சேர்ந்த சுஹைப்.

பறவை ப்ரீடரான இவர் நம்மிடம் பகிர்ந்தவை: ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, பிங்க் அழகி தான் இந்த காலா காக்கட்டூ. கழுத்து, அடிப்பகுதி இளங்சிவப்பாகவும், சிறகு முழுக்க சாம்பலாகவும் இருக்கும் சிறிய இன கிளி. அதீத சுறுசுறுப்பும், ஆற்றலும் கொண்டது.

வீட்டில் யார், எப்படி பேசுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்து, அப்படியே மிமிக்ரி செய்து காட்டும். அதீத புத்திசாலி, எப்போதும் விளையாடி கொண்டே இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு ஏற்ற துணை. மழலையின் சுட்டித்தனத்தை ரசிக்க விரும்புகிறவர்கள், இப்பறவை வாங்கலாம். அதிகபட்சம் 400 கிராம் எடை தான் இருக்கும். நன்கு பராமரித்தால், 40-60 ஆண்டுகள் உயிர்வாழும். எல்லா தட்பவெப்ப சூழலிலும் வளரும் என்பதால், பராமரிப்புக்கு அதிக மெனக்கெட வேண்டியதில்லை.

தானியங்கள், விதைகள், நட்ஸ், காய்கறிகள், கீரைகள் விரும்பி சாப்பிடும். உங்கள் மனநிலை அறிந்து அதற்கேற்ப உங்களோடு உறவாடுவதில் கில்லாடி. தோளில் அமர்ந்து, காதில் கீச்சிட்டு, எந்நேரமும் கதை பேசும் சிறகு முளைத்த குழந்தை போலவே வீட்டை வலம் வரும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap