ஹீரோ 'பேஷன் பிளஸ் டிஸ்க்' டிஸ்க் பிரேக் வருகை; மைலேஜ் 71 கி.மீ.,
ஹீரோ 'பேஷன் பிளஸ் டிஸ்க்' டிஸ்க் பிரேக் வருகை; மைலேஜ் 71 கி.மீ.,
UPDATED : ஜூலை 01, 2026 07:40 AM
ADDED : ஜூலை 01, 2026 07:35 AM

'ஹீரோ' நிறுவனம், 'பேஷன் பிளஸ் டிஸ்க்' என்ற புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. முதல் முறை யாக பேஷன் பிளஸ் மாடலில், டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை, அடிப்படை மாடலை விட 3,800 ரூபாய் அதிகம்.
இந்த பைக்கில் வரும் 97.2 சி.சி., இன்ஜினுடன் 4 - ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
![]() |
பைக் கின் மைலேஜை அதிகரிக்க ஆட்டோ ஸ்டார்ட் ஸ்டாப் வசதி உள்ளது. அதனால், மைலேஜ் 71 கி.மீ., வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. டிஸ்க் பிரேக் உள்ளதால், பைக்கின் எடை 1 கிலோ உயர்ந்து, 116 கிலோவில் உள்ளது.
நான்கு டூயல் டோன் நிறங்களில் கிடைக்கும் இந்த பைக்கில், டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, எல்.இ.டி., ஹெட் லைட், யூ.எஸ்.பி., போர்ட், சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆப் ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

