/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
புதிய வீட்டுக்கு ஜன்னல் வாங்க 'ஷாப்பிங்' போகலாம் வாங்க…!
/
புதிய வீட்டுக்கு ஜன்னல் வாங்க 'ஷாப்பிங்' போகலாம் வாங்க…!
புதிய வீட்டுக்கு ஜன்னல் வாங்க 'ஷாப்பிங்' போகலாம் வாங்க…!
புதிய வீட்டுக்கு ஜன்னல் வாங்க 'ஷாப்பிங்' போகலாம் வாங்க…!
ADDED : ஜூலை 06, 2024 07:20 AM

புதிய வீட்டில் ஒவ்வொரு பாகமும் மிக உறுதியாக, பார்ப்போரை கவரும் வகையில் மிக அழகாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால், இதில் எப்போது, என்ன முடிவு எடுப்பது என்பதில் தான் பெரும்பாலான மக்கள் தவறுகள் செய்வதாக கூறப்படுகிறது.
இன்றைய சூழலில், புதிதாக வீடு கட்டும் நபர்கள் அதில் உட்புறம் அனைத்து அறைகளிலும் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்காக தேவையான எண்ணிக்கையில் ஜன்னல்கள், வென்டிலேட்டர்கள் அமைக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
முந்தைய காலங்களில் வீட்டில் எந்தெந்த இடங்களில் ஜன்னல் அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான வழிமுறைகளை மக்கள் இறுதி செய்தனர். ஆனால், தற்போது, ஜன்னல் அமைப்பதற்காக பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதனால், பொது மக்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்று ஜன்னல்கள், கதவுகள் ஆகியவற்றையும் ஷாப்பிங் செய்து வாங்கலாம். சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஜன்னல்கள் போன்ற பாகங்களை விற்பனை செய்வதற்கான கடைகள் அதிகமாக வந்துள்ளன.
உங்கள் புதிய வீட்டில் ஜன்னல் அமைப்பதற்காக விடப்பட்ட இடத்தில் அளவுகளை எடுத்து சென்றால் போதும், யுபிவிசி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களில் தயாரிக்கப்படும் ஜன்னல்களை உடனுக்குடன் வாங்கிவிட முடியும் என்ற அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்துள்ளது.
நீங்கள் வீட்டுக்கு ஜன்னல் வாங்க வேண்டும் என்றால், அதற்கான வணிக வளாகங்கள் தற்போது வந்துள்ளன. உரிய அளவுகளுடன் சென்றால், விரும்பிய வடிவத்தில் வண்ணத்தில் ஜன்னல்கள் அதற்கான கதவுகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கிவிடலாம்.
இது போன்று, ஜன்னல்கள் வாங்க செல்லும் போது, உங்கள் வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர் அல்லது பணி பொறுப்பாளர் ஒருவரை உடன் அழைத்து செல்வது நல்லது. குறிப்பாக, எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை முடிவு செய்யும் போது அதற்கான உத்தரவாதம், தரச்சான்று விபரங்களை விசாரிப்பது அவசியம்.
ஜன்னல்கள் வாங்கும் நிலையில், அதில் இணைக்கப்படும் கண்ணாடிகளையும் உடனே தேர்வு செய்வது மிக மிக அவசியம். இதில் வீட்டின் ஜன்னலில் எத்தகைய கண்ணாடிகள் இருக்க வேண்டும், அதன் வண்ணம், வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.