sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

ஆலோசனை

/

துடியலுார் கிராமத்தில் பழமையான வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?

/

துடியலுார் கிராமத்தில் பழமையான வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?

துடியலுார் கிராமத்தில் பழமையான வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?

துடியலுார் கிராமத்தில் பழமையான வீட்டை என்ன விலைக்கு வாங்கலாம்?


ADDED : மே 31, 2025 04:35 AM

Google News

ADDED : மே 31, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம், துடியலுார் கிராமம் ஆர்.டி.ஓ., முன்புறம் மூன்று சென்ட் இடம் மற்றும், 300 சதுரடிகள் கொண்ட மிகவும் பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது; என்ன விலை கொடுத்து வாங்கலாம்?

-ராஜலட்சுமி, கோவை.

இந்த இடம், மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் இருந்து ஒரு கி.மீ., துாரத்திலும், துடியலுார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, அரை கி.மீ., துாரத்திலும் இருக்கும் பழைய லே-அவுட். இதை இடித்துவிட்டு புதிதாக, 1,500 சதுரடியில் கீழும், மேலுமாக கட்டடம் கட்டலாம். விட்டுவிட கூடாத ஒரு சொத்தாகும். ரூ.42 முதல், 44 லட்சத்துக்குள் வாங்குவது சரியானது.

கோவை மாவட்டம், சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், இடிகரை மற்றும் கீரணத்தம் பகுதியில் சொத்து வாங்க, எண்ணி உள்ளேன். வருவாய் கிடைக்கும் வகையில் எந்த வகையான கட்டடம் கட்ட வேண்டும் என்பதை கூறவும்.

-கிருத்திகாதேவி, கணபதி.

இப்பகுதி மென்பொருள் நிறுவனங்கள், கல்லுாரிகள் சூழ்ந்த இடமாகும். எனவே, அந்நிறுவனங்களில் இருந்து நடைபயணமாக, 1.5 கி.மீ.,க்குள் அமைந்தால், ஒரு சென்ட் ரூ.13 லட்சத்தில் இருந்து, 15 லட்சத்தில் திசை பார்த்து, மெயின் ரோட்டில் இருந்து துாரம் பார்த்து வாங்கி அதில் விடுதியாக கட்டும்போது, செலவுகள் போக ரூ.25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கோவை, கிணத்துக்கடவு தாலுக்கா, வடசித்துார் கிராமத்தில் மூன்று ஏக்கர் நிலமும், அதில் கட்டியுள்ள, 10 ஆயிரம் சதுரடிகள் கொண்ட குடோனும் விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்?

-நாராயணசாமி, வடவள்ளி.

கோவை-பொள்ளாச்சி ரோடு மற்றும் பழநி ரோடு இப்போது பிரபலமாகி, குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இக்குடியிருப்புகள் மெயின் ரோட்டிற்கு இருபுறமும், 2 கி.மீ.,ல்தான் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு பின்னர்தான் தொழிற்சாலைகள் வர வாய்ப்புண்டு. எனவே, நீங்கள் சொல்லும் சொத்து, தொழிற்சாலைகள் அமைத்து நடத்த ஏதுவான இடமாகும். மேற்படி சொத்து ரூ.2 கோடி மதிப்புள்ளது.

என் தாயாருக்கு சீதனமாக வந்த, 30 சென்ட் இடம் அவருக்குப்பின் அவரது மகள்களான எனக்கும், என் தங்கைக்கும் உரிமையானதா அல்லது என் மூத்த சகோதரருக்கும் அதில் பங்கு உண்டா என்பது குறித்து விளக்கவும்.

-சந்திரா, கோவைப்புதுார்.

தங்கள் தாயார் உயில் செட்டில்மென்ட் என ஏதும் எழுதாதபோது, அது உங்கள் மூவருக்குமே சம பங்காகத்தான் பிரியும்.

தகவல்: ஆர்.எம். மயிலேறு,

கன்சல்டிங் இன்ஜினியர்.






      Dinamalar
      Follow us