/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 'ரெரா' கட்டுமானத்துக்கு உதவுவதால் கைதட்டலாம் ஜோரா!
/
உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 'ரெரா' கட்டுமானத்துக்கு உதவுவதால் கைதட்டலாம் ஜோரா!
உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 'ரெரா' கட்டுமானத்துக்கு உதவுவதால் கைதட்டலாம் ஜோரா!
உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 'ரெரா' கட்டுமானத்துக்கு உதவுவதால் கைதட்டலாம் ஜோரா!
ADDED : ஜூன் 20, 2025 11:56 PM

'ரெரா' என்பது ரியல் எஸ்டேட்(ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், 2016 எனப்படும் சட்டத்தின் சுருக்கமாகும். எந்த ஒரு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையிலும் வாங்குபவர் மற்றும் விற்பவர் பொறுப்புணர்வு, வெளிப்படை தன்மை மற்றும் இருவரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை, உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
இது 'டெவலப்பர்'கள் மற்றும் 'புரமோட்டர்'கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், திட்ட பதிவு மற்றும் திட்ட நிறைவு காலக் கட்டங்களை வகைப்படுத்துகிறது என்கிறார், அகில இந்திய கட்டுனர் சங்க கோவை மைய பொருளாளர் சத்தியராஜ்.
அவர் மேலும் கூறியதாவது:
மனைகள் விற்பனை செய்யும் போது, 500 சதுர மீட்டர் மேல், அல்லது எட்டு வீடுகளுக்கு மேல் கொண்ட குடியிருப்பு கட்டடம் இருந்தால், அந்த திட்டம் ரெராவில் பதிவு செய்ய வேண்டும். ஒரு புரமோட்டர் மனைகளை விற்கும் போது , 'கேட்டெட் கம்யூனிட்டி' திட்டத்தின் கீழ் விற்பனை செய்தாலும் சாலை, குடிநீர் போன்ற வசதிகளை உறுதி செய்கிறார் என்றாலும், அது ரியல் எஸ்டேட் திட்டமாக மாறுகிறது.
இது, டீ.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., எல்.பி.ஏ., போன்ற இடங்களில் அனுமதி பெற்றிருந்தாலும், ரெரா பதிவு இல்லாமல் விளம்பரம் செய்வதும், விற்பனையும் செய்வதும், சட்டத்திற்குப் புறம்பானது. பெரிய நிலப்பகுதி சிறு மனைகளாக, குடியிருப்பு நோக்கத்தில் உட்பிரிவு செய்து விற்பனை செய்யும்போது, டெவலப்பர் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கிறார் என்றால், இது ரெராவில் வரக்கூடிய திட்டமாகும்.
சமர்ப்பிக்கும், அனைத்து படிவங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் ரெராவில், 30 முதல், 60 நாட்களுக்குள் ஒப்புதல் பெறலாம்.
டெவலப்பர் தனது விளம்பரத்தில், ரெரா அனுமதி பெற்ற எண் மற்றும் அதன் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
வாடிக்கையாளர்கள் திட்ட விவரங்களை, ஆன்லைனில் காணலாம். கட்டமைப்பு முன்னேற்றத்தை கண்காணிக்கலாம். தாமதம், முறை மீறல் ஏற்பட்டால் புகார் அளிக்கலாம். டெவலப்பர் குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்காமல் இருக்கலாம்.
அப்போது, வாடிக்கையாளர் வட்டியுடன் பணத்தை திருப்பி பெறலாம் அல்லது புதிய காலக்கெடுக்களில் வேலை முடிக்க, டெவலப்பர் கட்டாயப்படுத்தப்படுவார்.
'ரெரா' ஆணையம், டெவலப்பருக்கு அபராதம் விதிக்கலாம். விவரங்களுக்கு, www.rera.tn.gov.in என்ற இணையதளத்தில் காணவும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
டீ.டி.சி.பி., சி.எம்.டி.ஏ., எல்.பி.ஏ., போன்ற இடங்களில் அனுமதி பெற்றிருந்தாலும், ரெரா பதிவு இல்லாமல் விளம்பரம் செய்வதும், விற்பனையும் செய்வதும், சட்டத்திற்குப் புறம்பானது. பெரிய நிலப்பகுதி சிறு மனைகளாக, குடியிருப்பு நோக்கத்தில் உட்பிரிவு செய்து விற்பனை செய்யும்போது, டெவலப்பர் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கிறார் என்றால், இது ரெராவில் வரக்கூடிய திட்டமாகும்.