/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கான்கிரீட் கட்டுமானங்களை வெட்டும் பணியை எளிதாக்கும் 'டைமண்ட் கட்டர்!'
/
கான்கிரீட் கட்டுமானங்களை வெட்டும் பணியை எளிதாக்கும் 'டைமண்ட் கட்டர்!'
கான்கிரீட் கட்டுமானங்களை வெட்டும் பணியை எளிதாக்கும் 'டைமண்ட் கட்டர்!'
கான்கிரீட் கட்டுமானங்களை வெட்டும் பணியை எளிதாக்கும் 'டைமண்ட் கட்டர்!'
ADDED : ஜன 28, 2024 09:17 AM

இன்றைய சூழலில் காலி நிலம் கிடைக்காத நிலையில், பழைய கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதற்காக, 30 அல்லது 40 ஆண்டுகளை கடந்த குடியிருப்புகள் இடிக்கப்படுகின்றன.
இவ்வாறு, பழைய கட்டடங்களை இடிப்பதில் பெரிய கருவிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெரிய அளவில் இருக்கும் கட்டடங்களை இடிப்பது என்றால் இக்கருவிகள் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால், சிறிய அளவிலான கட்டடங்களை இடித்து அகற்றுவதில், பெரிய இயந்திரங்களை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அதே நேரத்தில், கான்கிரீட் கட்டுமானங்களை உடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது.
நெரிசல் மிகுந்த இடங்களில் சிறிய அளவிலான கட்டடத்தை உடைப்பது என்றாலும், அது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு, தீர்வாக வந்துள்ளது 'எலட்ரிக் டைமண்ட் கட்டர்!'.சுவர்களில் துளையிட பயன்படுத்தப்படும் டிரில்லர் போன்ற அளவில் இருக்கும் டைமண்ட் கட்டர்கள், கான்கிரீட் கட்டுமானங்களை அறுப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன.
கான்கிரீட், கிராணைட் அமைப்புகள், உலோக அமைப்புகள் ஆகியவற்றை துண்டாக்குவதில் இக்கருவி சிறப்பாக செயல்படுகிறது.தற்போதைய நிலவரப்படி, சந்தையில் கிடைக்கும் வெட்டு கருவிகளைவிட இருமடங்கு செயல் திறன் கொண்டதாக இது அமைந்துள்ளது.
அதிக சுமை இருக்காது என்பதால், இக்கருவியை பணியாளர்கள் கைகளால் பிடித்து பயன்படுத்த முடியும்.

