sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

செய்திகள்

/

கணினியில் கட்டடங்களின் வடிவங்களை தேடுவோர் கவனிக்க வேண்டியவை

/

கணினியில் கட்டடங்களின் வடிவங்களை தேடுவோர் கவனிக்க வேண்டியவை

கணினியில் கட்டடங்களின் வடிவங்களை தேடுவோர் கவனிக்க வேண்டியவை

கணினியில் கட்டடங்களின் வடிவங்களை தேடுவோர் கவனிக்க வேண்டியவை


ADDED : ஜன 28, 2024 09:20 AM

Google News

ADDED : ஜன 28, 2024 09:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடு கட்டவேண்டும் என தீர்மானித்ததும் முதல் செய்ய வேண்டியது நம் கனவு இல்லத்தின் வரைபடத்தை தீர்மானிப்பதுதான். புதிய வீடு கட்டுவோர் அதற்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். இதற்காக, பல்வேறு வழிமுறைகளை அவர்கள் கடைபிடிக்கின்றனர்.

முந்தைய காலங்களில் கட்டட வடிவமைப்பாளர் பரிந்துரைக்கும் விதத்தில் தான் ஒவ்வொரு கட்டடத்தின் வெளிப்புற தோற்மும் இருக்கும்.

நம் பொறியாளர், நம் உறவுகளில் சொந்த வீட்டு கட்டியவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரும் சொல்லும் ஐடியாவை நாமும் கேட்டுக்கொள்வோம். ஆனால் தற்போது மக்கள் இந்த விஷயத்தில் பல்வேறு சொந்த கருத்துகளை தெரிவிக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிவிப்பதில் அதன் உரிமையாளரின் பங்களிப்பு தற்போது தவிர்க்க முடியாததாக உள்ளது. மாதிரி வரைபடங்கள் முப்பரிணாம வடிவத்திலும் உள்ளன.இதில் கட்டட வடிவமைப்பாளரிடம் செல்லும் முன், ஏராளமான மாதிரிகளை பரிசீலிப்பதில் உரிமையாளர்கள் ஈடுபாடு காட்டுகின்றனர்.

அந்த மாதிரிகள் பார்க்கவும் அழகாய்,அமசமாய் தொடர்ந்து செய்வதற்கு ஏற்றதாய் இருத்தல் அவசியம்.முக்கியமாய் நம் வீடு கட்டும் செலவின் பார்வையில்சிக்கனமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்.

இதற்காக, கணினியில் விரிவான தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு உதவும் பல்வேறு தனியார் இணையதளங்கள் கட்டடங்களின் மாதிரி தோற்றங்களை வெளியிட்டுள்ளன. இவ்வாறு கணினி வழியே புதிய வடிவமைப்புகளை தேடுவது நல்ல முயற்சி தான். ஆனால் இதில் சில அடிப்படை வழிமுறைகளை கவனமாக பார்க்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக, உங்கள் வீட்டு வடிவமைப்பிற்கு ஒரு நல்ல வரைத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அது நிறுவப்படும் இடத்தின் தன்மை ஆகும். இணையதளங்களில் காட்டப்படும் வடிவமைப்புகள் இன்ன பகுதிக்கானது என்று வகைபடுத்தப்படாமல் இருக்கும். இதில் உங்கள் பகுதிக்கு ஏற்ற வடிவமைப்பு எது என்பதை முடிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

குளிர் பிரதேசங்களுக்கான வடிவமைப்பை, வெயில் பிரதேசங்களில் உள்ள இடங்களுக்கு பயன்படுத்தினால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். புதிய வடிமைப்புகளை தேடுவோர், தங்கள் பகுதிக்கான வடிவமைப்பு எது என்பதற்கான புரிதலுடன் செயல்பட வேண்டும்.

உங்கள் வீட்டு வடிவமைப்பிற்கு ஒரு நல்ல வரைதிட்டம் அல்லது டெம்ப்ளேட்டைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அதன் அனைத்து அம்சங்களையும் பார்த்து, உங்களுக்கு எது மிகவும் முக்கியமானது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இணையதளங்கள் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற வகையிலேயே கட்டட வடிவமைப்புகளை வெளியிடுகின்றன. இதில் சில இணையதளங்கள் எத்தகைய பகுதிக்கு இந்த வடிவமைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதை குறிப்பிடுகின்றன. இவ்வாறு நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், கட்டட வடிவமைப்பாளரின் வழிகாட்டுதலை கவனத்தில் வைத்து செயல்படுவது அவசியம். தொழில்நுட்ப ரீதியாக விதிகளுக்கு உட்பட்டு வடிவமைப்புகள் இருப்பது அவசியம்.

அறைகள் மற்றும் நியமிக்கப்பட்ட இடங்களுக்கான சரியான அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். படுக்கையறைகள், நடைபாதைகள், குளியலறைகள், சமையலறை, கேரேஜ் மற்றும் அடித்தளம் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் ஏற்பாடு ஆகியவை துல்லியமான அளவீடுகளுடன் உங்கள் வீட்டின் திட்டங்களில் சரியாகக் காட்டப்பட வேண்டும்.

நீங்கள் அங்கு இருப்பதைப் பார்க்க முடியாதபோது, ​​​​ஒரு திட்டத்தை வடிவமைப்பது கடினம் என்கின்றனர் கட்டட வடிவமைப்பாளர்கள்.

கவனிக்க:

* கணினியில் வரைபடம் தேர்ந்தெடுத்து அப்படியே நமக்கு பயன்படுத்த இயலாது. அளவுகள் மிகத்துல்லியமாக இருத்தல் அவசியம்* கட்டடக்கலை திட்டங்கள் கட்டடத்தைப் போலவே விரிவானதாக இருக்கும். ஒரு வீடு அல்லது கட்டடம் எவ்வாறு அமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படும் என்பதை கணினி வரைத்திட்டம் காட்டுகிறது* குறிப்பிட்ட மின்சாரம், பிளம்பிங் மற்றும் காற்றோட்டம் அமைப்புகள் எங்கு இருக்க வேண்டும் மற்றும் இணைக்கப்பட வேண்டும் என்பதை இது காண்பிக்கும்.








      Dinamalar
      Follow us