/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டடத்தின் ஆயுளை நீட்டிக்கும் ரசாயன பொருட்கள்
/
கட்டடத்தின் ஆயுளை நீட்டிக்கும் ரசாயன பொருட்கள்
ADDED : செப் 19, 2025 08:45 PM

பு திதாக கட்டப்படும் வீடோ அல்லது கட்டி முடித்த பழைய வீட்டையோ முறையாக பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் கட்டடங்கள், தன் உறுதித்தன்மையை இழக்காது, நீண்டநாள் நிலைத்து நிற்கும். கட்டடத்தின் வலிமை குறைய பல்வேறு காரணங்கள் உள்ளன.
நீர்க்கசிவு ஓதம், கட்டடங்களில் விரிசல், எக்ஸ்பேன்சன் ஜாயின்ட், பழைய கட்டுமானத்துடன் புதிய கட்டுமானத்தை இணைத்து இணைப்பை பாதித்துவிடுதல், வெப்பம், குழியான பகுதியில் அதிகமான எடையுள்ள பொருட்களை நிரப்புதல், இரும்பு கம்பிகள் துருப்பிடித்தல் போன்ற காரணங்களால் கட்டடம் பாதிக்கப்படுகிறது.
புதிய கட்டடத்தின் அடித்தளம், பிளின்த் மட்டம், லிண்டல், கூரை, மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி போன்ற நிலைகளில் இதற்கான ரசாயன பொருட்களை பயன் படுத்தி தண்ணீரால் வரும் பாதிப்புகளை தடுக்க முடியும்.
கட்டடத்தில் வரும் பள்ளமான பகுதியான குளியல் அறை, போர்ட்டிக்கோ போன்ற பல்வேறு பகுதிகளில் எடை அதிகமான செங்கல் பொடிகளை கொண்டு, வழக்கமாக நிரப்புவதை தவிர்க்க வேண்டும். தற்போது எடை குறைவான கனமான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன.
பழைய கட்டடத்துடன், புதிய கட்டுமானத்தை இணைக்கும்போதும், டைல்ஸ், மார்பிள் கற்களை ஒட்டும்போதும், அதன் இணைப்பு விட்டுவிடாது இருப்பதற்கும், தேவையான இணைப்பு பொருட்கள் பல்வேறு ரகங்களில் கிடைக்கின்றன.
அவற்றை பயன்படுத்தி கட்டடத்தில் இணைப்பை பலப் படுத்தி பாதுகாக்கலாம். மரம், சுவர் மற்றும் தரைப்பகுதியை கரையான், எலி, எறும்பு போன்ற சிறு உயிர்களால் கட்டடங்களில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
அதற்கான மருந்து வாங்கி ஊசி வாயிலாகவோ, துளையிட்டோ நீரில் கலந்து தெளித்து பாதிப்புகளை தவிர்க்கலாம். கட்டட பாதிப்புகளை தவிர்க்க, சரியான முறையை தேர்வு செய்து, தக்க பாதுகாப்புடன் பயன்படுத்தினால், பல்வேறு பாதிப்புகளில் இருந்து கட்டடத்தை பாதுகாக்கலாம் என்கின்றனர் பொறியாளர்கள்.