/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு ஒப்படைப்பின் போது பணி நிறைவு சான்றிதழ் இருப்பது அவசியம்!
/
வீடு ஒப்படைப்பின் போது பணி நிறைவு சான்றிதழ் இருப்பது அவசியம்!
வீடு ஒப்படைப்பின் போது பணி நிறைவு சான்றிதழ் இருப்பது அவசியம்!
வீடு ஒப்படைப்பின் போது பணி நிறைவு சான்றிதழ் இருப்பது அவசியம்!
ADDED : செப் 13, 2025 07:27 AM

பு திதாக வீடு வாங்கும் போது நில உரிமை ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை முறையாக, முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இதில் வீடு வாங்கும் முன் அது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதுடன் அனைத்தும் முடிந்துவிடாது.
குறிப்பாக, ஒரு சொத்து குறித்த புழக்கத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது என்று அத்துடன் அமைதியாக இருந்துவிட கூடாது. இதில் அடிப்படை ஆவணங்கள் சரியாக இருக்கும் நிலையில் வங்கிகள் கடன் கொடுக்க முன்வந்து விட்டால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இதில் வீடு வாங்கும் நிலையில், ஆரம்ப கட்டத் துடன் அனைத்து ஆய்வு களை முடிந்துவிடாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, விற்பனையின் போது தெரிவிக்கப்படும் வரைபடங்கள் அடிப்படையில் கட்டுமான பணிகள் நடக்கிறதா என்று பாருங்கள்.
வரைபடம் சரியாக இருக்கிறது என்று வங்கிகள் கடன் கொடுக்க ஒப்புக்கொண்டால் போதும், அதைமட்டுமே நம்பி அமைதியாக இருந்துவிட கூடாது. ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்தின் படியே வீடு கட்டப்பட்டுள்ளதா என்பதை மக்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கட்டுமான திட்ட பணிகள் நடக்கும் நிலையில் தங்களுக்கு நம்பகமான பொறியாளர் உதவியுடன் ஆய்வு செய்யலாம். இதில் விற்பனைக்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ளும் போது அல்லது கட்டுமான ஒப்பந்த நிலையில் உறுதி செய்ய வேண்டும்.
இது மட்டுமல்லாது, வீடு கட்டும் பணிகள் எப்போது துவங்கும், எப்போது முடிக்கப்படும் என்பதை கட்டுமான ஒப்பந்த நிலையிலேயே தெளிவுபடுத்த வேண்டும். இத்துடன், அசாதாரண காரணங்களால் கட்டு மான பணிகள் தாமதம் ஏற்பட்டால் அது குறித்த விபரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் சி.சி., எனப்படும் பணி நிறைவு சான்றிதழ் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை பார்க்காமல் வீட்டை பெற கூடாது. வீடு ஒப்படைக்கும் நிலையில், பணி நிறைவு சான்றிதழ் பிரதியை கேட்டு வாங்க வேண்டும்.
அதே நேரத்தில், கட்டடத்தில் வாகன நிறுத்து மிடம் போன்ற விஷயங் களிலும் தெளிவான விபரங் களை பெறுவது அவசியம். சில இடங்களில் கட்டடத்தின் ஒரு பகுதிக்கு மட்டும் பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கும் அதிலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இத்துடன், பணி நிறைவு சான்றிதழில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப் பட்டுள்ளதா என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும். நிபந்தனைகள் இருந்தால் அதை பூர்த்தி செய்வது யார் பொறுப்பு என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.