/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
மேல்தளத்தை தாங்கும் பீம்களை அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
/
மேல்தளத்தை தாங்கும் பீம்களை அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
மேல்தளத்தை தாங்கும் பீம்களை அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
மேல்தளத்தை தாங்கும் பீம்களை அமைப்பதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : ஜூன் 28, 2025 10:30 AM

பொதுவாக புதிய வீட்டுக்கான கட்டுமான பணிகளை துவக்கும் நிலையில், அஸ்திவாரம், பீம்களுக்கான பணிகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது விஷயத்தில் போதிய விபரம் அனைவருக்கும் தெரியாது என்றாலும், வேறு நபர்களிடம் விசாரித்து அடிப்படை விஷயங்களை உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும்.
இந்த வகையில் புதிய கட்டடத்துக்கான அஸ்திவார துாண் எப்படி உறுதியாக அமைய வேண்டும், தரைமட்டத்தில் இத்துாண்களை இணைக்கும் பிளிந்த் பீம்கள் சரியாக அமைய வேண்டும் என்பதிலும் மக்கள் கவனம் செலுத்த துவங்கிவிட்டனர். ஆனால், இதற்கு அடுத்தடுத்த நிலையில் பீம்கள் விஷயத்தில் மக்கள் மத்தியில் அலட்சியம் காணப்படுகிறது.
தரை மட்டத்தில் பிளிந்த் பீம் அமைத்த பின் சுவர் எழுப்பி, சன்ஷேட்கள் அமைக்கும் இடத்தில் லிண்டல் பீம்கள் அமைக்கப்படும். இந்த இடத்தில் பீம்கள் அமைப்பது மட்டுமல்லாது, வெளிப்புறத்தில் சன்ேஷட்களும், உட்புறம் பரண்களும் அமைக்கப்படும் என்பதை கவனத்தில் வைத்து பொது மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
இதில் வேறும் பீம்களுக்கான பணிகள் தானே என்று அலட்சியமாக இருக்காமல், இது போன்ற பீம்கள் அமைக்கும் போது, அதன் அளவுகள் தொடர்பாக மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பொதுவாக தரை மட்டத்தில் பீம் அமைக்கும் போது அதன் மேற்பகுதியில் அளவு மாறுபாடு ஏற்படாமல் இருக்க உரிய தடுப்புகள் அமைக்கப்படும்.
ஆனால், லிண்டல் பீம் போன்றவற்றுக்கான பணிகளில் அளவுகள் சரியாக தான் இருக்கும் என்ற எண்ணம் காரணமாக மக்கள் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க தவறுகின்றனர். லிண்டல் பீம்களுடன் பணிகள்முடிந்துவிட்டன, சுவர் எழுப்பிமேல் தளம் அமைத்தால் போதும் என்று மக்கள்நினைக்கின்றனர்.
உண்மையில் ஒரு கட்டடத்தில சுமை பரவலில், லிண்டல் பீம்களுக்கு மேல், தளம் அமைக்கும் இடத்தில் ஒரு பீம் அமைக்கப்படுவது வழக்கம், ரூப் பீம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கட்டடத்தில் என்ன உயரத்தில் தளம் அமைக்க போகிறோம் என்பதை உறுதி செய்து கொண்டு அதற்கு ஏற்ப, ரூப் பீம் அமையும் இடத்தை முடிவு செய்ய வேண்டும்.
தரை மட்டத்தில் துாண்களுக்கு இடைப்பட்ட இடைவெளி எவ்வளவு இருந்ததோ அதே அளவுக்கு தான் இங்கும் இடைவெளி இருக்கிறதா என்பதை சரிபார்த்து, அதன் பின் ரூப் பீம் அமைக்கும் பணிகளைமேற்கொள்ள வேண்டும். இதில், இடைவெளியின் அளவுவேறுபடுவது தெரிந்தால் அதை சரி செய்து தான் ரூப் பீம்அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக பிளிந்த், லிண்டல் பீம்களுக்கான அளவிலேயே ரூப் பீம் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அந்த கட்டடத்தின் மொத்த பரப்பளவு, உயரம், மேல் தளத்தின் அளவு உள்ளிட்ட விபரங்கள் அடிப்படையிலேயே ரூப் பீம்களுக்கான அளவுகள் முடிவு செய்யப்படும்.
இத்துடன், மேல் தளத்தின் ஒட்டுமொத்த சுமையை முதல் நிலையில் தாங்கும் அமைப்பாக இந்த பீம்கள் அமைந்துள்ளன என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில், இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறைவல்லுநர்கள்.