
'செவிலியாக வேண்டும்' என்பது சுதாவின் இளவயது கனவு. பெரும் முயற்சியுடன் தன் கனவை நிஜமாக்கியவர், கடந்த ஓர் ஆண்டாக கிராம சுகாதார செவிலி பொறுப்பில் விருது நகர் கோபாலபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
பணி துவக்கம்: 1997முதல் களம்: தாய் சேய் நல விடுதி, பி.பி.,குளம், மதுரை.பதவி: செவிலிதுறை அனுபவம்: 27 ஆண்டுகள்
அம்மாவுக்கு சமர்ப்பணம்
மகப்பேறு மரணத்தால அம்மாவை இழந்தவ நான். 'தாய் பாசம் இல்லையே'ங்கிற ஏக்கத்தை சின்ன வயசை காட்டிலும் வளர்ந்த பிறகுதான் அதிகமா அனுபவிச்சேன். இந்த தாக்கம்தான் நான் செவிலியாக காரணம். இதுவரைக்கும் நான் பங்கேற்ற 3,000க்கும் அதிகமான பிரசவங்கள்ல எதுலேயும் தோல்வி பார்க்கலை. பிரசவத்துக்கு அப்புறம் எல்லாருக்கும் சேய் மேலதான் கவனம் இருக்கும்; ஆனா, எனக்கு தாய் மேலதான் கவனம் போகும்!
நட்புக்காலம்
'பெண்களின் நட்பு நீண்ட நாட்கள் தொடராது'ன்னு சொல்வாங்க; ஆனா, செவிலியர் பயிற்சியில அறிமுகமான கிருஷ்ணவேணி, வேல்விழி, வெங்கடேஸ்வரி நட்பை நான் இன்னமும் கைவிடலை. நாங்க அடிக்கடி 'வீடியோ கால்' பேசிக்கிறோம்; வாய்ப்புள்ள சமயங்கள்ல நேர்ல சந்திக்கிறோம். இந்த நட்பாலதான் குடும்பம், பணிச்சூழலை கடந்தும் எனக்கொரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்குறதை நான் உணர்றேன்!
தனது பணி சார்ந்த பகுதியில் ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் மருத்துவரீதியிலான அனைத்து தகவல்களையும் பதிவு செய்வது சுதாவின் பணி. தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் தருவது உள்ளிட்ட சுகாதாரத்துறையின் திட்டங்களை வீடு வீடாக எடுத்துச் செல்கிறார்.
மை டியர் ஜூனியர்ஸ்...
சில நேரங்கள்ல செவிலியரோட வார்த்தைகளும் நோயாளிகளுக்கு மருந்தா மாறும். அதனால, 'ஊசி போடுவது எப்படி, ரத்தம் எடுப்பது எப்படி, மருத்துவ குறிப்புகளை கையாள்வது எப்படி'ன்னு மட்டுமே கத்துக்காம, நோயாளிகளிடம் நேர்மறை எண்ணங்களை விதைக்கவும் கத்துக்கோங்க!
கத்தி மீது நடக்க வைக்குமா இப்பணி?
'இல்லை'ன்னு சொல்லிட முடியாது; சிலநேரங்கள்ல இந்த சூழல் தவிர்க்க முடியாதது. பாலியல் வன்முறையால கர்ப்பமாகி வர்ற சிறுமிகளுக்கு மனநல சிகிச்சைக்கு அப்புறம், 'நீ உன் உடம்பை கவனிச்சுக்கணும்; பழங்கள் சாப்பிடு; இந்த டானிக் குடி; தாய்ப்பால் தர்றப்போ குழந்தையை இந்தமாதிரி பிடி'ன்னு அறிவுரை சொல்றப்போ மனசு ரொம்ப வலிக்கும். அந்த வலியோட பேசுற அந்த தருணம்... நீங்க கேட்டதை உணர்வேன்.
சுருக்: 'ஆரோக்கியத்தை இழந்துட்டீங்கன்னா மொத்த வாழ்க்கையையும் இழந்த மாதிரி'ங்கிற அறிவுரையை நாங்க நிறுத்தவே முடியாதா?