sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

அவளே சரணம்

/

பெண்மை என் பெருமை!

/

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஜூலை 28, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலை விபத்தால் தனது வலதுகால் மூட்டுப் பகுதியில் உலோக தட்டு பொருத்திய கணத்தில், அந்த தட்டு தான் தனது புதிய கனவுக்கான சாவி என்பதை தமிழ்செல்வி உணரவில்லை. காவலராகும் அவரது சிறு வயது கனவு மறுக்கப்பட்டது. ஆனால் இன்று, 'பாடி பில்டிங் - பவர் லிப் டிங்' களத்தில் அவரை நிலைநிறுத்தி இருக்கிறது காலம்!

கணவர் சண்முகம், மகள்கள் ரிதன்யா, ஜோவிஷாவுடன் கோவை, குரும்பபாளையத்தில் வசிக்கும் தமிழ்செல்வி உடற்பயிற்சி கூடத்தின் பயிற்றுனர்!

கனவுகளற்ற பட்சத்தில் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?

தடகள வீராங்கனை கனவுக்கு வீட்ல தடை போட்டப்போ ஏமாற்றம் இருந்திருக்காது. காவலர் தேர்வுக்கு வந்த கடிதத்தை மறைச்சு கல்யாணம் பண்ணி வைச்சதை கேள்விப்பட்டு மனசு வலிச்சிருக்காது. மீண்டும் காவலர் தேர்வுக்கு கடிதம் வந்து கணவர் மறுத்தப்போ துவண்டிருக்க மாட்டேன். சுருக்கமா சொல்லணும்னா... ப்ரிட்ஜ்ல வைச்ச ஆப்பிளா வாழ்க்கை இருந்திருக்கும்!

தனது கால் மூட்டுப் பகுதியை குணப்படுத்தவே உடற்பயிற்சிக்கூடம் சென்றார் தமிழ்செல்வி. பிறிதொரு களத்தில் தன்னை மீட்டெடுக்கும் உந்துதலை உடற்பயிற்சிகள் தரவே, 2018ல் உதயமானது 'பாடி பில்டிங் - பவர் லிப்டிங்' கனவு!

ஒரே நேரத்தில் இரண்டு களம்... எதனால்?

'பாடி பில்டிங்' பண்ண கட்டுப்பாடோட சாப்பிடணும்; 'பவர் லிப்டிங்' பண்ண நிறைய சாப்பிடணும். தசைகளை இறுக்கமாக்க, 'பாடி பில்டிங்' போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்னாடி உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க, எச்சில் விழுங்கன்னு நிறைய கட்டுப்பாடுகள்! விவரிக்க முடியாத சிரமங்களை தந்தாலும் என் மனக்காயங்களுக்கு மருந்தாகவும், என்னை நான் நேசிக்கவும் இந்த இரண்டு களங்களும் உதவுது!

தனியார் அமைப்பு நடத்திய 'ஆசிய பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் மாடல் - 2022'ல் வெண்கலம் வென்றபோது தமிழ்செல்வியின் வயது 37. 'மிஸ் தமிழ்நாடு' உட்பட மாநில அளவில் பல பதக்கங்களும் வென்றிருக்கிறார்.

இந்த பயணம் தந்திருக்கும் பலன்கள்?

என் பயணம் என் மகள்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு. சிகரெட் பழக்கத்தை என் கணவர் கைவிட்டிருக்கார்.

அவ்வளவுதானா?

அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் நடத்துற போட்டியில பங்கெடுக்க நிறைய அரசியலை கடந்துவர வேண்டியிருக்கு. தனியார் அமைப்புகள் நடத்துற போட்டிகள்ல பங்கெடுக்கிறதால அரசுப்பணி, அரசு ஊக்கத்தொகைக்கான வாய்ப்புகள் இல்லை!

ஆனாலும்... யார் அங்கீகரிக்கத் தவறினாலும்... தன் திறமையை பெருமிதத்துடன் கொண்டாடத் தவறுவதில்லை தமிழ்செல்வி.

தமிழ்ச்செல்வியின் புதுப்புது அர்த்தங்கள்

* வெற்றி? - தேடல்*சொத்து? - அனுபவம்* மகிழ்ச்சி? - செயல்






      Dinamalar
      Follow us