
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'மருத்துவ சேவையின் தரத்தில் தமிழகம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது!' - இது, உங்க நம்பிக்கை. ஆனா, 'தமிழக அரசோட மருத்துவ சிகிச்சையால என் வாழ்க்கை சின்னாபின்னமாகி இருக்கு!' - இது, நான் அனுபவிச்சு சொல்ற உண்மை!
தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்துல ஜனவரி 12, 2022ல் நிகழ்ந்த என் இரண்டாவது பிரசவத்துல நான் ஆரோக்கியமா இருந்தேன்; இதுக்கு, மருத்துவ சான்றுகள் இருக்கு. ஆனா, பிப்ரவரி 28, 2022ல் அங்கே நிகழ்ந்த கருத்தடை அறுவை சிகிச்சையில பெரும் குற்றம் நிகழ்ந்திருச்சு!
இப்போவரைக்கும் மூச்சுத்திணறல், இருமல், மயக்கம்னு தொடர் உடல் உபாதைகளால சிரமப்படுற எனக்கு, ஆட்சியர்கிட்டே மனு (எண்: 7721475) கொடுத்ததுக்கு அப்புறம் வீடு தேடி வருது உங்க அரசு சிகிச்சை! ஆனா, 'அந்த கருத்தடை அறுவை சிகிச்சை(!) குற்றத்திற்கு காரணம் யார்'ங்கிற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை!
'டாஸ்மாக்' மதுவுக்கு கணவர் அடிமையாகி கிடக்குறாரு. இரண்டு பிஞ்சு குழந்தைகளை வளர்க்க ரொம்பவே சிரமப்படுறேன். அய்யா... நுண்துளை அறுவை சிகிச்சைக்காக போன எனக்கு, ரத்த நாளங்கள்ல பிரச்னையை ஏற்படுத்தினது யாரு?
உங்க ஆட்சியில நிகழ்ந்த இந்த கொடுமைக்கு பரிகாரம் கிடையாதா?
- பிப்ரவரி 2022ல் அரசு மருத்துவமனையில் இழைக்கப்பட்ட மருத்துவ அநீதியால் உடல்நலம் குன்றியிருக்கும் அனு பல்லவி, தாளவாடி, ஈரோடு.