தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/ஏதோ பெரிய நோய் இருப்பதாக அச்சம்!

ஏதோ பெரிய நோய் இருப்பதாக அச்சம்!

ஏதோ பெரிய நோய் இருப்பதாக அச்சம்!


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலில் எந்த நோயும் இல்லாத போதும், தனக்கு தீவிரமான நோய் பாதிப்பு இருப்பதாகவோ அல்லது நோய் வரப்போவதாகவோ அச்சப்பட்டு, அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வதும், டாக்டர்களை மாற்றிக் கொண்டே இருப்பதும், ஒருவித தீவிர மனநோய் தான் என்கிறார், மனநல மருத்துவர் பவித்ரா.

அவர் கூறியதாவது:

இல்லாத நோய்க்கு பயப்படும் ஒரு மனநல நோய்தான் இன்று பல முதியோரை பாடாய்படுத்துகிறது. இதன் பெயர் ஹைப்போகாண்ட்ரியாசிஸ் (Hypochondriasis) .

ஆழ்மன அழுத்தம், மன பிரச்னை, சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், உள்மனதின் பிரச்னைக்கு முடிவு கிடைக்காத ஆற்றாமை நிலை போன்றவற்றில் இருந்து எப்படி விடுபடுவது என தெரியாமல், சுற்றியிருப்போரின் ஆதரவு தேடுவதற்காக, தனக்கு ஏதோ நோய் இருப்பதாக சொல்லிக்கொள்வர். சில நேரங்களில் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தாலும் இப்பாதிப்பு ஏற்படலாம். சாதாரண தலைவலி, இருமல், கட்டி இருந்தால் கூட, புற்றுநோய், மாரடைப்பு என பெரிய ஆபத்தாக கருதி, அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்வர். அதில் முடிவுகள் நெகட்டிவ் ஆக இருந்தால் மகிழ்ச்சி வராது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி, நாட்டு மருத்துவம் வரை அடிக்கடி மருந்துகள் எடுத்துக் கொள்வர். இவர்களுக்கு உளவியல் சிகிச்சை மட்டுமே தீர்வு.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'முதியோரிடம் ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும்'

'காக்னட்டிவ் பிகேவியரல் தெரபி' எனும் உளவியல் சிகிச்சை மூலம், நோயாளிக்கான தேவையற்ற பயம், பதட்டத்தைபோக்கி, நல்ல சிந்தனை வளர்க்க பயிற்சி அளிக்கப்படும். கவுன்சிலிங் மற்றும் மருந்துகள் மூலம், இந்த நோய் பாதிப்பில் இருந்து விடுவிக்கலாம். இப்பாதிப்புக்குள்ளான முதியோரை, வீட்டில் இருப்பவர்கள் அரவணைப்பதும், ஆறுதலாக நடந்து கொள்வதும் அவசியம். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என அன்பாக கைகளை இறுக பற்றினாலே, இந்த உளவியல் பாதிப்பில் இருந்து, மீட்டெடுக்க முடியும் என்கிறார் டாக்டர் பவித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us