தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/100 நாட்களுக்குள் முழுமையான கேன்சர் சிகிச்சை!

100 நாட்களுக்குள் முழுமையான கேன்சர் சிகிச்சை!

100 நாட்களுக்குள் முழுமையான கேன்சர் சிகிச்சை!

1


PUBLISHED ON : ஜூன் 21, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக 'ரோபோடிக்' அறுவை சிகிச்சை நடைமுறையில் உள்ளது.

எங்கள் மையத்தில் கர்ப்பப்பை வாய், கருக்குழாய், பிராஸ்டேட், பெருங்குடல், மலக்குடல், சிறுநீரகங்கள், நுரையீரல், உணவுக்குழாய் என்று பல்வேறு விதமான கேன்சர்களுக்கு, ரோபோடிக் தொழில்நுட்பத்தில் அறுவை சிகிச்சை செய்கிறோம். குறிப்பாக, தலை, கழுத்து பகுதியில் வரும் கேன்சர்களுக்கு இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.

ரோபோடிக் தொழில்நுட்பம் அறிமுகமான உடனேயே எங்கள் மையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். விலை மிக அதிகம் என்பதால், எங்களால் வாங்க முடியவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதால் சாத்தியமானது.

எங்களிடம் இருப்பது, 'டேவின்சி ரோபோடிக் சர்ஜிக்கல் சிஸ்டம்' என்ற நவீன தொழில்நுட்பம்.

கடந்த சில ஆண்டுகளாக, சிக்கலான பல கேன்சர் அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் செய்கிறோம்; நல்ல பலன் தெரிய ஆரம்பித்து உள்ளது.

பொருளாதார வசதியில் பின்தங்கியவர்கள் எங்கள் மையத்திற்கு வருவது அதிகம். புதிதாக ஒரு தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும்போது, யாராவது ஒருவர் அதற்கான விலையை கொடுத்து தான் ஆக வேண்டும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி செய்வதால், 60 சதவீத நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் சிகிச்சை அளிக்கிறோம்.

இதனால், ரோபோடிக் சிகிச்சைக்கு ஆகும் செலவில், ஐந்தில் ஒரு பங்கு கட்டணத்தில் சிகிச்சை தர முடிகிறது.

எதிர்காலத்தில் இதற்கென்று பிரத்யேக நிதியை உருவாக்கும் திட்டமும் உள்ளது.

கேன்சரை பொருத்தவரை அறுவை சிகிச்சை மட்டுமல்ல; பல நோயாளிகளுக்கு கீமோதெரபி, கதிரியக்கம் என்று பல்வேறு விதமான சிகிச்சைகள் தேவைப்படும். எங்கள் மையத்தில் முழுமையான கேன்சர் சிகிச்சையை, தரத்தில் சமரசம் செய்யாமல், 100 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்துள்ளோம்.

திறந்த நிலை அறுவை சிகிச்சையில், நீண்ட நாட்கள் 'ஐசியூ'வில் இருக்க வேண்டியிருக்கும்; வலி அதிகம் இருக்கும்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்யும் போது, இது எளிதாகி உள்ளது.

இப்படி குறிப்பிட்ட நாட்களுக்குள் மொத்த சிகிச்சையையும் முடிக்கும் போது, நோயாளியின் வாழ்க்கைத் தரம் உயர்வதோடு, குணமாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.



டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, துணை மருத்துவ இயக்குநர், தலை, கழுத்து அறுவை சிகிச்சை பிரிவு, அடையாறு கேன்சர் மையம், சென்னை 044 - 22209150 drarvindkrishnamurthy@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us