Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் பாதிப்புகள்

சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் பாதிப்புகள்

சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் பாதிப்புகள்


PUBLISHED ON : மார் 08, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 08, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்டர்கள் எச்சரிக்கை

பல ஆண்டுகளாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கின் மற்றும் டேம்பன் என்னும் திரவத்தை உறிஞ்சும் பருத்தி குச்சி போன்ற தயாரிப்புகளை பயன்படுத்துகின்றனர். இவற்றை பயன்படுத்துவது எளிமை என்ற போதிலும் இதன் காரணமாக அவர்களுக்கு உடல் சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நாப்கின் மற்றும் டேம்பன் போன்ற பொருட்கள் பருத்தி பஞ்சுகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பருத்தி வளர்ச்சிக்காக அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிகள் நமது தோலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதேபோல், சில நிறுவனங்கள் துாய்மையான வெள்ளை நிறத்தில் நாப்கின்களை விற்பனை செய்கின்றன. இதில் அந்த துாய்மையைக் கொண்டு வருவதற்காக ப்ளீச்சிங் பயன்படுத்துகின்றன. இவை தவிர, சானிட்டரி நாப்கின்களில் பித்தலேட்டுகள் மற்றும் ஆவியாகும் கரிம கலவைகள் ஆகியவையும் உள்ளன. பித்தலேட்டுகள் என்பது பிளாஸ்டிக் பொருட்களை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்காக உபயோகப்படுத்தும் ஒருவித ரசாயனம் ஆகும். அதேசமயம் ஆவியாகும் கரிம கலவைகள் என்பது பெயின்ட், தரைவிரிப்புகள், பசைகள், நுரை, ஏர் பிரஷ்னர், சுத்தம் செய்யும் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.

பெண்களின் பிறப்பு உறுப்பு பகுதி மிகவும் மென்மையான சவ்வு களைக் கொண்டதாகும். இந்த பகுதியில் இதுபோன்ற ரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகளை பயன் படுத் தும்போது அதில் உள்ள ரசாயனங்கள் உறிஞ்சப்படும் வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே பெண்கள் இதுபோன்ற நாப்கின்களை பயன்படுத்துவதைவிட, பூச்சிக்கொல்லி மற்றும் ப்ளீச் இல்லாத ஆர்கானிக் நாப்கின்களை பயன் படுத்துவது மிகவும் நல்லது.

நாப்கின்களைக் காட்டிலும் டேம்பன்களை பயன்படுத்துவது என்பது மிகவும் எளிதானதாகும். அதேசமயம் அவற்றை அதிக நேரம் பிறப்பு உறுப்பு பகுதியில் வைத்திருக்கும்போது டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் என்னும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாக்டீரி யாக்கள் உருவாகும் அபாயம் உள்ளது. டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் நோய்க்கான அறிகுறிகள் என் பது அதிக காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் வாந்தி, உறுப்பு செயலிழப்பு, விரைவான சுவாசம், தலைவலி, போதுமான சிறுநீர் உற்பத்தியின்மை மற்றும் மனக் குழப்பம் போன்றவை ஏற்படலாம். மேலும் இதன் காரணமாக உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம்.

அதிர்ஷ்டவசமாக, அதுபோன்ற டேம்பன்கள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதன் காரணமாக டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் நோய் பாதிப்பு எண்ணிக்கையானது வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் நீங்கள் நாப்கின் பயன்படுத்துபவராக இருந்தால் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொள்ளவது கட்டாயம் ஆகும்.

இதற்கு மாற்றாக பாரம்பரிய தயாரிப்புகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தும்போது உடல் ஆரோக்கிய பாதிப்பு என்பது வெகுவாக குறையும். அவை சிலிக்கான் அடிப்படையிலானவை ஆகும். இவற்றில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்கள் எதுவும் இல்லை. அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகும். அவற்றை உடனுக்குடன் துாக்கி எறியத் தேவையில்லை. அதற்கு பதிலாக, நாம் அவற்றை துவைத்து, சுத்தப்படுத்தி, மீண்டும் பயன்படுத்தலாம். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைவதோடு, அதை அவர்கள் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap