Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வாயை உற்று நோக்குங்கள்... வாழ்க்கையை மாற்றும் பாருங்கள்...

வாயை உற்று நோக்குங்கள்... வாழ்க்கையை மாற்றும் பாருங்கள்...

வாயை உற்று நோக்குங்கள்... வாழ்க்கையை மாற்றும் பாருங்கள்...


PUBLISHED ON : ஏப் 13, 2025

Follow on Google

PUBLISHED ON : ஏப் 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று இதய நோய், ரத்த அழுத்தம் சாதாரணமாக காணப்படுகிறது. பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவர்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகம் கவனிக்க வேண்டும்.

சிலருக்கு அடிக்கடி வாய் உலர்ந்து போகும். நாக்கு ஒட்டிக்கொள்வது போல் இருக்கும். வாயில் எரிச்சலும் இருக்கும். இந்த நிலைக்கு சீரோஸ்டோமியா (Xerostomia) என்று பெயர். உமிழ் நீர் சுரப்பது குறையும்போது இதன் அறிகுறிகள் தென்படும். சீரோஸ்டோமியா வருவதற்கு உணவுபழக்கம், உடலில் இரும்புசத்து குறைவு, சில மாத்திரைகள், புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம், சர்க்கரை நோய் போன்ற பல காரணங்கள் உண்டு.

இதற்கு சிகிச்சை எடுக்காவிட்டால் உணவு உண்பதற்கும் விழுங்குவதற்கும் கடினமாகிவிடும். நமது உமிழ்நீர் இயற்கையாகவே வாயில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அது குறையும்போது சொத்தைப்பற்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பல் செட் அணிபவர்களும் வாய் உலர்ந்து போகும் பட்சத்தில் பல் செட் அணிய முடியாமல் அவதிப்படுவர். இது நீண்ட காலம் தொடர்ந்தால் அஜீரண கோளாறுகள், வயிறு உபாதைகள் வரக்கூடும்.

வாய் துர்நாற்றம், வாயில் உள்ள பிரச்னைகளால் வருவதை விட உடலில் உள்ள உபாதைகளால் வருவதே அதிகம். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களோ, சுவாச கோளாறோ அதிகமாக உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். தொண்டைப்புண், கிருமி மற்றும் பூஞ்சை தாக்குதலின் போதும் வாயில் வெள்ளை திட்டுகள் மற்றும் வாய் துர்நாற்றமும் வரும். உடலில் வைட்டமின் சத்து குறையும்போது ஈறு நோய்களும் வாய் எரிச்சலும் ஏற்படும்.

நோய்களை வாயில் தோன்றும் அறிகுறிகள் மூலமாக ஆரம்பநிலையிலேயே கண்டுபிடித்து விடலாம். சரியான முறையில் சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் வாயும் உடலும் ஆரோக்கியம் பெற்று நலமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.



- டாக்டர் ஜெ. கண்ணபெருமான்

மதுரை. 94441 54551

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap