Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலர்விழி, மதுரை: கல்லீரலில் கொழுப்பு படியும் 'பேட்டி லிவர்' நோயை குணப்படுத்துவது எப்படி?



மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு படியும் நோய் தான் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது. உங்களுக்கு கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் வந்ததற்கு காரணம், கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உண்டதனால் இல்லை; மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்டதே காரணம். அது அதிக தானியமாகவும், அதிக இனிப்பாகவும் இருக்கலாம். நாம் உண்ணும் எக்ஸ்ட்ரா மாவுச்சத்து அனைத்தும் கொழுப்பாக மாறி உடலில் சேமிக்கப்படும்.

உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்கிறது என்றால் மாவுச்சத்தின் அளவு உடல் முழுவதும் தொப்பை, தொடை என்று சேமிக்கப்பட்டு எஞ்சியது உள்ளுறுப்புகளில் சேமிக்கப்படுகிறது. இதன் விளைவாக ட்ரைகிளசரைடுகள் எனும் கொழுப்பு, கல்லீரல், கணையம் உள்ளிட்ட அனைத்து உள்ளுறுப்புகளிலும் படிய ஆரம்பிக்கிறது.

நீங்கள் உண்ணும் உணவில் மாவுச்சத்து அளவு 300 முதல் 400 கிராம் என்ற அளவில் தினமும் உள்ளது. அதை 50 கிராமிற்கு கீழ் குறைக்க வேண்டும். அதைத்தான் 'பேலியோ' உணவுமுறை செய்கிறது. மாவுச்சத்தை குறைப்பதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு படியும் நோயை சரி செய்ய முடியும். தானியங்கள் சார்ந்த உணவு முறையில் அதிக மாவுச்சத்து தினமும் சேர்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் உண்ணும் உணவு முறையில் பசி அடங்குவதில்லை. காலை நான்கு முட்டை, மதியம் காய்கறி, இரவு மாமிசம் என்று சாப்பிட்டால் மாவுச்சத்து 50 கிராமிற்கு கீழ் குறைக்கப்படுகிறது.

குறைக்கப்பட்ட மாவுச்சத்துக்கு பதிலாக கொழுப்பு மற்றும் புரதம் மூலம் கலோரிகள் உண்ணப்படுகின்றன. புரதம், கொழுப்பு இரண்டும் பசி உணர்வை கட்டுப்படுத்தக்கூடியவை. இந்த நிலையை 'உணவு சார்ந்த கொழுப்பு எரிக்கும் நிலை' என்கிறோம். கார்பனேட்டட் குளிர்பானங்கள் தினமும் குடித்தாலும் கல்லீரல் நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம். தினமும் உடற்பயிற்சி செய்வது, மிதமான வேகத்தில் ஒரு மணிநேரம் நடப்பது, ஜிம் எக்சர்சைஸ் செய்வது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

- டாக்டர் அ.ப.பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், சிவகங்கை.

பெ.குழந்தைவேல், செம்பட்டி: கோடைக்கால தொற்று பாதிப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் வழிகள்?

கோடைகால சரும பாதிப்புகளுக்கு பெரும்பாலும் உடல் வெப்பம் மட்டுமே காரணம் என எடுத்துக் கொள்ள வேண்டாம். சரும பராமரிப்பு மட்டுமின்றி உணவு செரிமான பகுதியும் முக்கியத்துவம் பெறுகிறது. உடல் சூட்டை தணிக்க நீர்ச்சத்துள்ள பழங்கள், வாரந்தோறும் காலைநேர எண்ணெய் குளியல் உதவும். ரெடிமேட் குளிர்பானங்கள், கடைகளில் கிடைக்கும் ஜூஸ்களில் வேதிப்பொருள் அடங்கிய நிறமி, சுவையூட்டிகளால் எதிர்வினை ஏற்படுத்தும். பழங்களை நேரடியாக வாங்கி பழச்சாறுகளை பயன்படுத்தலாம். தினசரி 3 லிட்டர்வரை தண்ணீர் எடுத்துக் கொள்வதும் அதற்கேற்ப சிறுநீர் வெளியேற்றமும் அவசியம். நமது உடலின் நீர்ச்சத்து, அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் எடுத்து கொள்ளப்படும். எண்ணெய் குளியல் சருமத்தின் நீர் தன்மையை சமப்படுத்தும். குளிக்க வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தலாம். காரம், எண்ணெய், உப்பு அதிகமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

- டாக்டர் சி.சிவகங்கா, சித்த மருத்துவர், சின்னாளபட்டி.

ஆர்.பார்வதி, பெரியகுளம்: பாட்டிக்கு மார்பக புற்றுநோய் இருந்தது. தற்போது மூன்றாம் தலைமுறைக்கு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா?

பெண்மையின் ஹார்மோன் அதிக சுரப்பினால் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்தியம் உண்டு. குடும்பத்தில் முன்னோர் யாருக்கெனும் இருக்கும் பட்சத்தில் 20 வயதிலும், இயல்பாக 35 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். மார்பகங்களில் கட்டிகள், வீக்கம், தோல் நிறம் மாறுதல், காம்புகளில் ரத்தம் வடிதல் போன்றவை இருந்தால் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும். கட்டிகள் இருந்து வலி இல்லை என்றாலும் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. வெட்கத்தால் வெளியே செல்லாமல் இருந்தால் நோய் அனைத்து இடங்களிலும் பரவி விடும். தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. மெமோகிராம் பரிசோதனை, ஹீமோதெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பது எளிது. இதில் சில வகைகளை தவிர நுாற்றுக்கு 90 சதவீதம் குணமாக்கலாம்.

- டாக்டர் பாரதி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்



எஸ்.அந்தோணிராஜ் ராமநாதபுரம்: எனக்கு 54 வயதாகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேல் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறேன். சமீப காலமாக பார்வை குறைந்து வருகிறது. சர்க்கரை நோய்க்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா?


சர்க்கரை நோய்க்கு மாத்திரை எடுப்பதன் மூலம் குறிப்பிட்ட காலம் தான் கட்டுக்குள் வைக்க முடியும். உடல் நிலையை பொறுத்து 10 முதல் 15 ஆண்டுகளுக்கு பின் இன்சுலின் எடுக்க வேண்டும். இதனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். அவ்வாறு சர்க்கரை நோய்க்கு எடுக்கும் மாத்திரை பலன் கொடுக்காத போது கண்களின் உள்ள விழித்திரை பாதிக்கப்படும். ஆரம்ப நிலையில் கண் பார்வை மங்குவது, மிதக்கும் புள்ளிகளை காண்பது ஆகிய பாதிப்பு ஏற்படும்.

அதனை கண்டு கொள்ளவில்லை என்றால் நிரந்தரமாக பார்வை இழக்கவாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை நோய்க்கான மாத்திரை பலன் கொடுக்காத பட்சத்தில் இன்சுலின் எடுக்க வேண்டும். இன்சுலின் எடுப்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்ற பயம் வேண்டாம்.

உடலின் சீரான இயக்கத்தை பராமரிப்பதில் இன்சுலின் முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை கட்டுக்குள் வைப்பதன் மூலமும், டாக்டரின் பரிந்துரை பேரில் இன்சுலின் எடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதை தவிர்க்க முடியும்.

- டாக்டர் எஸ்.ஆனந்தன், துணை பேராசிரியர், கண் மருத்துவப் பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

அ.அன்புசெல்வன், சிவகங்கை: சிறுநீரக கல் ஏன் வருகிறது. எவ்வாறு சரி செய்வது?

சிறுநீரில் உள்ள உப்புக்கள், கனிமங்கள் அதிகமாக செறிந்து ஒன்று சேரும் போது கடினமான துகள்களாக உருவாவது தான் சிறுநீரக கல். இவை முதலில் சிறுநீரகத்தில் உருவாகி, பின்னர் சிறுநீர்க் குழாய் வழியாக கீழே நகரும் போது திடீரென கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காத பழக்கத்தால் இந்த நோய் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சிறுநீரக கல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் காணப்படுதல், திடீரென கடுமையான இடுப்பு வலி ஏற்பட்டால் சிறுநீரக கல் இருப்பதற்கான பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது. இவற்றை தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பீட்ரூட், பாதாம், முந்திரி, சாக்லேட், தேநீர், கோகோ, சோயா பொருட்களை தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளில் 5 கிராமிற்கும் குறைவாக உப்பு பயன்படுத்த வேண்டும். ஜங்க் உணவு மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் கவுரிசண்முகன், சிறுநீரக நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

முனீஸ்வரன், விருதுநகர்: எனக்கு 32 வயதாகிறது, சிறுநீர் பாதையில் அடிக்கடி ஏற்படும் கல் அடைப்பை தடுக்கும் வழிமுறைகள் என்ன?

கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும் போது சிறுநீர் பாதையில் கல்லாக மாறுகிறது. இதை தடுக்க தினசரி 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமால் இருக்க வேண்டும்.

நீர்ச்சத்து நிறைந்த முள்ளங்கி, புடலைங்காய், பீர்க்கங்காய் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, காலிபிளவர், முட்டைகோஸ், மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு சித்த மருத்துவத்தில் கல் கரைச்சி மாத்திரைகள், சந்திரபிரபா வதி உள்பட பல்வேறு மருந்துகள் உள்ளது.

கல் அளவு, இருக்கும் இடத்தை பொறுத்து மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிறுநீர் பாதை 6 மி.மீ., அளவு கொண்டது என்பதால் அந்த அளவுக்குள் இருக்கும் கற்களை மருந்துகளால் கரைக்க முடியும். அதற்கு மேல் 12 மி.மீ., வரை உள்ள கற்களை உடைத்து அகற்ற வேண்டும். கற்களின் வகையை பொறுத்து, பரிசோதனைக்கு அனுப்பி, அதன் முடிவுகளின் அடிப்படையில் சிகிச்சை எடுப்பது சிறந்தது.



- டாக்டர் எஸ்.சத்தியசீலன், சித்த மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விருதுநகர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap