தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பாலுக்கு மாற்றாக கேழ்வரகு?

பாலுக்கு மாற்றாக கேழ்வரகு?

பாலுக்கு மாற்றாக கேழ்வரகு?


PUBLISHED ON : ஜன 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிப்பிட்ட வயதிற்கு மேல் பால் குடிக்கக்கூடாது என்று பால் பொருட்களை முழுமையாகத் தவிர்த்து, 'வீகன் டயட்'டை சிலர் பின்பற்றுகின்றனர்.

இதனாலேயே கால்சியம் சத்துக்காக, பாலுக்கு மாற்றாக கேழ்வரகு சாப்பிடச் சொல்கின்றனர்.

ஆனால், 100 கிராம் முழு கேழ்வரகை நம்மால் சாப்பிட முடியாது. மால்ட் வடிவில் ஒரு டேபிள் ஸ்பூன், 15 கிராம் பாலில் கலந்து தான் குடிக்கிறோம். இதில், வெறும் 40 மி.கிராம் கால்சியம் மட்டுமே உள்ளது.

தோசை, களி, புட்டு என்று வேறு எந்த வடிவில் எடுத்தாலும், நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குறைவான அளவு கேழ்வரகு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். 100 கிராமில், 10 கிராம் கொழுப்பில் கரையாத நார்ச்சத்து உள்ளது.

அன்றாட கால்சியம் தேவை என்பது வயதிற்கு ஏற்ப மாறுபடும். ஒரு வயதில் 500 மி.கிராமில் ஆரம்பித்து, வயது ஏற ஏற 1,000 மி.கிராம் வரை தேவைப்படும்.

இளம் வயதினருக்கு 800 மி.கிராம், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு 1,000 மி.கி., என்று மாறுபடும். 100 மில்லி பாலில், 340 மி.கிராம் கால்சியம் உள்ளது.

தினசரி 300 மில்லி பால் தந்தாலும் குழந்தைகள், முதியவர்களால் சுலபமாக குடிக்க முடியும். இதுதவிர, தயிர், பனீர் என்று எந்த பால் பொருளானாலும் இதே அளவு கால்சியம் உள்ளது. கால்சியம் கிடைக்க சுலபமான வழி பால், பால் பொருட்கள். இதற்கு கேழ்வரகை எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது.

ஏன் கால்சியம் குறைபாடு வருகிறது என்றால், கால்சியம் என்ற தாதுப்பொருளை முழுமையாக உடல் உறிஞ்சுவதற்கு, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் டி சத்து அவசியம். இது கிடைக்க தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது வெயிலில் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் யாரும் இதைச் செய்வதில்லை.



ரேஷ்மா அலீம்,

உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், ரேலா மருத்துவமனை, சென்னை73914 92472info@relainstitute.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us