sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/வாராவாரம்/நலம்/ரணத்தை போக்கும் ரணகள்ளி!

ரணத்தை போக்கும் ரணகள்ளி!

ரணத்தை போக்கும் ரணகள்ளி!


PUBLISHED ON : மே 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுநீரக கற்களை இயற்கையாக வெளியேற்றவும், மஞ்சள் காமாலையின் தீவிரத்தை படிப்படியாக குறைக்கவும் பயன்படக்கூடிய முக்கியமான மூலிகை ரணகள்ளி செடி. இந்த செடியின் ஒரு இலையை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்து, காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கி விட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு இலை தான் சாப்பிட வேண்டும். அதன்பின் அரை கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கல் இயல்பாக சிறுநீரில் வெளியேறி விடும். இதில் டயுரட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியை குறைக்கவும் இது உதவும்.

சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுகளையும் குணப்படுத்தும். மஞ்சள் பாதிப்பு நோய் இருந்து சிகிச்சை எடுப்பவர்களும் இந்த இலையை 10 நாட்கள் சாப்பிடலாம். நோயின் தீவிரம் குறையும்.

சர்க்கரை கோளாறு இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 நாட்களும் கட்டுப்பாட்டில் வைக்கும். 10 நாட்களுக்கு மேல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம். மைக்ரேன் உட்பட எந்தவிதமான தலைவலியாக இருந்தாலும், ரணகள்ளி இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து அரைத்து பற்று போடலாம். ஒரு வாரம் இப்படி செய்யும் போது, தலைவலியின் பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும்.

டாக்டர் ஆர்.மைதிலி,ஆயுர்வேத மருத்துவர்,சென்னை99522 62988drmythiliayur@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us