தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/குழந்தை கேட்கும் முதல் சத்தம்! வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு

குழந்தை கேட்கும் முதல் சத்தம்! வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு

குழந்தை கேட்கும் முதல் சத்தம்! வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு


PUBLISHED ON : மே 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறவியில் இருந்தே செவித்திறன் இல்லாத, குறைபாடு உடைய குழந்தைகளும் இயல்பு குழந்தைகளை போல பேச வேண்டும் என்பதற்காக, காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இதில், காதின் உள்பக்கமுள்ள செயல்படாத நரம்புகளை துாண்டி மூளைக்கு ஒலி சிக்னல்களை அனுப்புகிறது. காதின் வெளிப்புறமுள்ள கருவி மூலம், பேசும் ஒலி உள்ளே அனுப்பப்படுகிறது.

அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரத்திற்கு பிறகு, மிக குறைந்த அலைவரிசை மட்டும் கேட்கும் அளவுக்கு கருவியில் பதிவு செய்யப்படும்.

பிறந்த பிறகு கேட்கும் முதல் சத்தம் என்பதால், அதிக ஒலியாக இருந்தால், குழந்தைகளால் ஏற்று கொள்வதில் சிரமம் ஏற்படும். இதனால் படிப்படியாக அலைவரிசை அதிகரிக்கப்படும்.

இந்த முதல் சத்தம் கேட்கும் நொடியில், அழுவது, சிரிப்பது, கண்ணீருடன் புதுவித உணர்வை வெளிப்படுத்துவது என ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.

இதன்பிறகு, இரண்டு ஆண்டுகள், 200 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். கேட்பதை எப்படி உச்சரிப்பது, பதில் அளிப்பது, வார்த்தைகளை அறிந்து கொள்வது குறித்து விளக்கப்படும்.

இரு ஆண்டுகள் முறையாக பயிற்சி பெற்ற குழந்தைகளால், இயல்பு குழந்தைகளை போல, வாழ்நாள் முழுக்க செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கோவை அரசு மருத்துவமனையில், 2013ல் இருந்து காக்ளியர் இம்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 306 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 26 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிறந்த ஓராண்டுக்குள் செவித்திறன் இல்லாததை கண்டறிந்தால், பயிற்சி அளிப்பது எளிது. ஆறு வயதுக்கு மேலான குழந்தைகள், சைகை மொழியில் பழகியிருப்பர். சிலர் இக்கருவி பொருத்தி கொள்வதை அசவுகர்யமாக கருதுவர். தொடர்ந்து அவர்களை வழிநடத்தி, பயிற்சி அளித்து பேச வைக்கிறோம். தொடர் பயிற்சியால், இக்குழந்தைகள் இயல்பு நிலைக்கு மாறிவிடுவர். கருவியில் பழுது ஏற்பட்டால், காப்பீடு திட்டம் வாயிலாக சரி செய்து தருகிறோம். ஒருமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து அக்கருவியை பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்கிறோம்.

- காவ்யா செவிவழி பேச்சு பயிற்சியாளர் அரசு மருத்துவமனை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us