தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/உயிரியல் உலகம்: ரீலா ரியலா?

உயிரியல் உலகம்: ரீலா ரியலா?

உயிரியல் உலகம்: ரீலா ரியலா?


PUBLISHED ON : ஜன 13, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கனவாய் மீனுக்கு மூன்று இதயங்கள் உள்ளன.

உண்மை. கனவாய் (Cuttlefish) எனப்படும் மீன் இனத்திற்குத் தான் அந்தச் சிறப்பு. இந்த மீன், ஸ்குவிட், ஆக்டோபஸ் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதை செப்பலோபாட்ஸ் (Cephalopod) எனவும் அழைக்கின்றனர். கனவாய் மீனின் இதயம் பார்ப்பதற்குப் பெரிதாக, ஒரே இதயமாகத் தோன்றும். உண்மையில் இதற்கு ஓர் இதயம் அல்ல, மூன்று இதயங்கள். இரண்டு இதயங்கள் செவுள்களுக்கு (Gills) ரத்தத்தைப் பாய்ச்சும், மூன்றாவது இதயம் பிற உறுப்புகளுக்கு (Organs) பாய்ச்சும்.

இந்த மீனின் உடல் தட்டையாக இருப்பதால் கடலில் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது. இவை சிறிய மீன்களை உண்ணக்கூடியவை. பிற உயிர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள, பச்சோந்தி போலத் தன் நிறத்தைப் பின்புல நிறத்திற்கு ஏற்ப மாற்றும் இயல்புடையது. தன்னை வேட்டையாட வரும் உயிரினங்களிடமிருந்து காத்துக்கொள்ள கறுப்பு நிறத் திரவத்தை வெளியிடும். அது தண்ணீரில் கலந்தவுடன், தற்காலிகமாகத் தப்பிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us