Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: பழமொழியில் வரும் எண்கள்

அமிழ்தமிழ்து: பழமொழியில் வரும் எண்கள்

அமிழ்தமிழ்து: பழமொழியில் வரும் எண்கள்


PUBLISHED ON : நவ 18, 2024

Follow on Google

PUBLISHED ON : நவ 18, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

பேச்சிலும் எழுத்திலும் எண்ணுப் பெயர்களைப் பயன்படுத்துவது நம் வழக்கம். எதுவாயினும் எண்ணிக்கொள்வது ஓர் ஒழுங்கு. அதனால் நம் வாழ்க்கையில் எண்ணுப் பெயர்களுக்குக் கட்டாயமான இடம் உண்டு.

எண்ணுப் பெயர்களைப் பயன்படுத்தி வழங்கப்படும் பழமொழிகள், சொலவடைகள் பல. போகிற போக்கில் எண்களைப் பயன்படுத்திச் சொல்லப்படுபவை அவை. கீழே எண்ணுப் பெயர்கள் இடம்பெறும் பழமொழிகள் தரப்பட்டிருக்கின்றன. அந்த எண்ணுப் பெயரை மட்டும் நீங்கள் நிரப்பவேண்டும். எளிமையான புதிர்தான். நமக்கு எண்ணுப் பெயர்கள் எவ்வாறெல்லாம் பயன்படுகின்றன என்று உணர முடியும்.

அ) தான் பிடித்த முயலுக்கு __________ கால்

ஆ) ஆனை இருந்தாலும் __________ பொன்; இறந்தாலும் __________ பொன்

இ) சுண்டைக்காய் __________ பணம்; சுமைக்கூலி __________ பணம்

ஈ) பசி வந்தால் __________ம் பறந்துபோகும்.

உ) ஒரே கல்லில் __________ மாங்காய்

ஊ) நொறுங்கத் தின்றால் __________ வயது

-மகுடேசுவரன்

விடைகள்:

அ. மூன்று

ஆ. ஆயிரம்

இ. கால், முக்கால்

ஈ. பத்து

உ. இரண்டு

ஊ. நூறு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap