தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஜூன் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜி.டி.பி. கடந்த 2025-26 நிதியாண்டில், முந்தைய ஆண்டின் 710 சதவீதத்தில் இருந்து, எவ்வளவு சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது?

அ. 7.75

ஆ. 7.50

இ. 7.70

ஈ. 7.85

2. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உள்ள சுவாமிநாதன் ஜானகிராமனின் பதவிக் காலத்தை, மத்திய அரசு மேலும் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது?

அ. ஓராண்டு

ஆ. இரண்டாண்டு

இ. மூன்றாண்டு

ஈ. ஐந்தாண்டு

3. தமிழகத்தில், திருச்சி கிழக்கு உட்பட எத்தனை சட்டசபை தொகுதிகளில், விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது?

அ. ஐந்து

ஆ. மூன்று

இ. இரண்டு

ஈ. நான்கு

4. 'இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எங்கள் நாட்டில் முதலீடு செய்தால், சலுகைகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்படும்' என, எந்த நாட்டின் தொழில்துறை அமைச்சர் சோக்குருக் குலமோவ் தெரிவித்துள்ளார்?

அ. ஆப்கானிஸ்தான்

ஆ. கஜகஸ்தான்

இ. உஸ்பெகிஸ்தான்

ஈ. வங்கதேசம்



5. சண்டிகரில் நடந்த, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ், எத்தனை ரன் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது?


அ. 250

ஆ. 100

இ. 200

ஈ. 300

விடைகள்: 1.இ, 2.ஆ, 3.அ, 4.இ, 5.ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us