தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நூற்றுக்கு நூறு: எந்தப் பெட்டி மேலே?

நூற்றுக்கு நூறு: எந்தப் பெட்டி மேலே?

நூற்றுக்கு நூறு: எந்தப் பெட்டி மேலே?


PUBLISHED ON : மே 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

A, B, C, D, E, F மற்றும் G ஆகிய ஏழு பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்படுகின்றன. ஆனால், அவை எழுத்து வரிசையில் அமைக்கப்படவில்லை.

படத்தில் உள்ளது போல் அடுக்கப்படுகின்றன:

* Bக்குக் கீழே இரண்டு பெட்டிகள் மட்டுமே வைக்கப்படுகின்றன.

* Fக்கு மேலே ஒரே ஒரு பெட்டி மட்டுமே வைக்கப்படுகிறது.

* F மற்றும் Dக்கு இடையில் ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கிறது.

* A பெட்டியானது Gக்கு மேலே அமைகிறது.

* Eக்குக் கீழே ஏதோ ஓர் இடத்தில் C பெட்டி வைக்கப்படுகிறது.

எனில், மேலே எந்தப் பெட்டி முதலில் இருக்கும்?

விடை: E

விளக்கம்:

Bக்குக் கீழே இரண்டு பெட்டிகள் மட்டுமே வைக்கப்படுவதால், B ஆனது மேலிருந்து 5வது பெட்டியாக இருக்கும்.

Fக்கு மேலே ஒரே ஒரு பெட்டி மட்டுமே வைக்கப்படுவதால், ' ஆனது மேலிருந்து 2வது பெட்டியாக இடம்பெறும்.

F மற்றும் Dக்கு இடையில் ஒரே ஒரு பெட்டி இருக்கிறது என்பதால், 1) ஆனது மேலிருந்து 4வது பெட்டியாகப் படத்தில் உள்ளபடி இருக்கும்.

E

F

C

D

B

A

G

A பெட்டியானது Gக்கு மேலே அமைகிறது.

அப்படியென்றால், கீழே காலியாக இருக்கும் இரு பெட்டிகளே சாத்தியம்.

அப்படியானால், முதல் பெட்டியில் மீதமிருக்கும் E அல்லது C மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது.

E பெட்டிக்குக்

கீழே C பெட்டி இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளதால், E பெட்டியே முதல் பெட்டியாக இருக்கும் என்று அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us