தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: தெரிந்துகொள்ளுங்கள்

திறன் உலா: தெரிந்துகொள்ளுங்கள்

திறன் உலா: தெரிந்துகொள்ளுங்கள்


PUBLISHED ON : அக் 06, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2025


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணினி வலையமைப்பு (Computer Network) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் (கணினிகள், மொபைல்கள், பிரிண்டர்கள், சேவையகங்கள் போன்றவை) ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு தரவு, வளங்கள், தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஓர் அமைப்பாகும். இந்த வலையமைப்புகள் சிறிய அளவில் நாம் வீட்டில் பயன்படுத்தும் சாதனம் முதல் மிகப்பெரிய அளவு (எ.கா. இணையம்) வரை பல வடிவங்களில் உள்ளன. அவற்றின் அளவு, புவியியல் வரம்பு, பயன்பாட்டின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. LAN (Local Area Network)

ஒரு சிறிய பகுதியில் (வீடு, அலுவலகம் அல்லது ஒரு கட்டடம்) இயங்கும் வலையமைப்பு (வீட்டு Wi-Fi நெட்வொர்க்).

2. WAN (Wide Area Network)

பரந்த புவியியல் பகுதியை (நகரங்கள், நாடுகள் அல்லது கண்டங்கள்) உள்ளடக்கிய வலையமைப்பு.

3. MAN (Metropolitan Area Network)

ஒரு நகரம் அல்லது பெரிய வளாகத்திற்குள் இயங்கும் வலையமைப்பு (கேபிள் டிவி நெட்வொர்க்).

4. PAN (Personal Area Network)

ஒரு தனிநபரின் சாதனங்களை இணைக்கும் மிகச் சிறிய வலையமைப்பு (புளூடூத்).

5. VPN (Virtual Private Network)

இணையத்தின் மூலம் பாதுகாப்பான, தனிப்பட்ட இணைப்பை உருவாக்கும் வலையமைப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us