தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: உருவாக்கியவர்கள் யார்?

திறன் உலா: உருவாக்கியவர்கள் யார்?

திறன் உலா: உருவாக்கியவர்கள் யார்?


PUBLISHED ON : மே 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் உடலுக்குள் நுழையும் கிருமிகள் எப்படி நம்மை நோய்வாய்ப்படுத்துகின்றனவோ, அதேபோலக் கணினிக்குள் நுழையும் தேவையற்ற புரோகிராம்களே வைரஸ் எனப்படுகின்றன. இது உங்கள் கணினியின் ஒரு கோப்பில் இருந்து மற்றொன்றுக்குப் பரவி, கணினியின் வேகத்தைக் குறைத்து, மென்பொருளைச் செயலிழக்கச் செய்யும்.

இந்த நச்சு மென்பொருள்களைக் (Malware) கண்டறிந்து, தடுத்து, அவற்றை நீக்குவதற்காக உருவாக்கப்பட்ட மென்பொருளே 'ஆன்டிவைரஸ்' (இணைய பாதுகாப்பு மென்பொருள்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு சில பிரபலமான ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை இணைய உலகில் யார் உருவாக்கி, அறிமுகப்படுத்தினர் என்பதைச் சொல்லுங்கள்.

1. மெக்காஃபி (McAfee)

2. அவாஸ்ட் (Avast)

3. காஸ்பெர்ஸ்கி (Kaspersky)

4. பிட்டிஃபென்டர் (Bitdefender)

5. மால்வேர்பைட்ஸ் (Malwarebytes)

6. ஈசெட் நோட்32 (ESET NOD32)

விடைகள்:

1. ஜான் மெக்காஃபி (John McAfee).

2. எட்வார்ட் குசிரா (Eduard Kucera) & பாவெல் பாடிஸ் (Pavel Baudis).

3. யூஜின் காஸ்பெர்ஸ்கி (Eugene Kaspersky).

4. புளோரின் தால்பேஸ் (Florin Talpe).

5. மார்சின் க்ளெசின்ஸ்கி (Marcin Kleczynski).

6. மிரோஸ்லாவ் ட்ரென்கா (Miroslav Trnka), பீட்டர் பாஸ்கோ (Peter Pasko) & ருடால்ப் ஷ்ரூபி

(Rudolf Hruby).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us