தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/கோவை டிஜே மெமோரியல் புகைப்படக் கண்காட்சி!

கோவை டிஜே மெமோரியல் புகைப்படக் கண்காட்சி!

கோவை டிஜே மெமோரியல் புகைப்படக் கண்காட்சி!


PUBLISHED ON : ஆக 07, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2026 04:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

Image 1606581இயற்கையின் வசீகர எழில், வனவிலங்குகளின் அரிய வாழ்வியல் ரகசியங்கள், வானிலிருந்து விரியும் பூமியின் மெய்சிலிர்க்க வைக்கும் அற்புதக் காட்சிகள் ஆகியவற்றைத் தங்களது கேமரா லென்ஸ் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கில் பயணித்து வரும் கோவை டிஜே மெமோரியல் புகைப்படக் கண்காட்சி, தனது 15-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவையில் ஒரு சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை நடத்தியது.

Image 1606577கோவை, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் வான்வழி காட்சிகள் , இயற்கைக் காட்சிகள் , மற்றும் வனவிலங்குகள் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் போட்டியில் வெற்றி பெற்ற மிகச் சிறந்த புகைப்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.Image 1606578புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல், மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.Image 1606579ஒவ்வொரு புகைப்படமும் வெறும் காட்சியாக இல்லாமல், இயற்கையின் அழகைப் போற்றுவதோடு நின்றுவிடாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் பார்வையாளர்களின் மனங்களில் ஆழமாக விதைக்கும் வகையில் அமைந்திருந்தது.Image 1606580இக்கண்காட்சியைப் பார்வையிட்டவர்கள், இயற்கை புகைப்படக் கலையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதுடன், இந்த உலகை முற்றிலும் வேறொரு புதிய கோணத்தில் காணும் பார்வையைப் பெற்றனர். மேலும், புகைப்படக் கலைஞர்களின் அசாத்திய திறமை, அவர்கள் காட்டிய பொறுமை மற்றும் இயற்கையின் மீது அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை இக்கண்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us