sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

பரளிக்காட்டில் பரிசல் பயணம்: பவானி ஆற்றில் பரவசக் குளியல்

/

பரளிக்காட்டில் பரிசல் பயணம்: பவானி ஆற்றில் பரவசக் குளியல்

பரளிக்காட்டில் பரிசல் பயணம்: பவானி ஆற்றில் பரவசக் குளியல்

பரளிக்காட்டில் பரிசல் பயணம்: பவானி ஆற்றில் பரவசக் குளியல்


ADDED : ஜூன் 29, 2025 04:59 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை பில்லுார் அணையின் காயல் தண்ணீர் (பேக்வாட்டர்) கடல் போல் பரந்து விரிந்து பரவசத்தையும் பயத்தையும் ஒருசேர தரும். குறைந்தது 15 முதல் 80 அடி ஆழமுள்ள காயல் தண்ணீரில் செல்லும் பரிசலில் அமர்ந்தபடி அலையடிப்பது போல சிறு சிறு நீர்ச்சுழிகளையும் கனமாக வீசும் காற்றையும் கடந்தவாறு மேற்கொள்ளும் பயணம் 'த்ரில் பீலிங்' தான். காயல் தண்ணீர் கரையை ஒட்டி பரந்து விரிந்த கரையில் ஆலமர நிழலில் அமர்ந்தவாறே மரக்கட்டை ஊஞ்சலில் ஆடுவது சுகம். இதற்காகவே பரளிக்காடு சூழல் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டும்.

வாகனங்களை நிறுத்த வசதியான இடம்; சிரித்தபடி நம்மை வரவேற்கும் பழங்குடியினர் கட்டஞ்சாயா எனப்படும் 'வற டீ' தருகின்றனர். சுக்கு, மிளகு இடித்து மூலிகை சுவையுடன் தரும் டீ தான் இங்கு 'வெல்கம் ட்ரிங்'. டீயை ருசித்தவாறே மரக்கட்டை ஊஞ்சலில் ஆடலாம். நம்மை காயலில் அழைத்துச் செல்ல 20 பரிசல் ஓட்டிகள் உள்ளனர். 18 பரிசல்கள் ஒரே நேரத்தில் இயக்கப்படும். அவசரத் தேவைக்கு இரண்டு பரிசல்கள் தயாராக இருக்கும்.

கோவை ரயில்வே ஜங்ஷன், பஸ் ஸ்டாண்டில் இருந்து 65 - 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பரளிக்காடு சூழல் சுற்றுலா. காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி செக்போஸ்ட் வழியாக பரளிக்காடு பகுதிக்கு அவரவர் வாகனத்தில் தான் வரவேண்டும். செக்போஸ்ட்டில் வனத்துறை அனுமதி பெற்ற பின் மலைப்பயணத்தில் பரளிக்காடு அடையலாம் என்கிறார் ஜோசப் ஸ்டாலின், ரேஞ்சர், காரமடை.

அவர் கூறியதாவது: காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் ஆன்லைன் மூலம் (https://coimbatorewilderness.com › baralikadu-booking) பதிவு செய்யலாம். பெரியவர்களுக்கு ரூ.600, சிறியவர்களுக்கு ரூ.500 கட்டணம். ஈகோ டூரிஸம் கமிட்டியில் கொடியூர், சேத்து மடை, பரளிக்காடு, நீராடி, பில்லுார் பழங்குடியினர் உள்ளனர். 10 கி.மீ.,க்குள் 80 குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இவர்களுக்கு வாழ்வாதாரம், பொருளாதாரம் உயர்த்துவதே சுற்றுலா நோக்கம். இங்கு வந்தால் பழங்குடியினருடன் கலந்துரையாடலாம். மதிய உணவுக்கு பின் அத்திக்கடவு (தோண்டை) அருகில் பவானி ஆற்றில் குளிக்க அனுமதிக்கிறோம்.

பூச்சிமரத்துார் சூழல் சுற்றுலா பகுதியில் இரவு நேரம் தங்க 8 பேர் தங்கும் வகையில் மூன்று அறைகள் உள்ளன. கட்டணம் ரூ.1000. இரண்டு நாள் சுற்றுலாவாக திட்டமிட்டு இங்கு வரலாம். வனத்துறை கண்காணிப்பின் பேரில் இந்த இடத்தை ரசிக்கலாம் என்றார்.

காடு, தண்ணீர், பரிசல் பயணம் குறித்து பழங்குடியினர் கூறியதாவது:

ராமன், தலைவர், காரமடை வனச்சூழல் குழு: எங்கள் குழுவில் 20 பரிசல் ஓட்டிகள் உள்ளோம். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் ஒரு நாளைக்கு ரெண்டு 'ட்ரிப்' பரிசல் ஓட்டுவோம். ஒரு 'ட்ரிப்'புக்கு ரூ.400 கிடைக்கும். ஒரு 'ட்ரிப்'புக்கு நான்கு பேர் பரிசலில் அமர்ந்தால் ஒன்றரை மணி நேரம் வரை ஒற்றை துடுப்பை கை மாற்றி மாற்றி இயக்க வேண்டும். பரிசலின் கனம் அதிகரிக்காமல் ஆட்களை அனுமதிப்போம். அதிர்ஷ்டம் இருந்தால் கரைகளில் புலி, சிறுத்தையை பார்க்கலாம். மீன்கொத்தி பறவை மீனைப் பிடித்துச் செல்லும் அழகை ரசிக்கலாம்.

ராஜப்பன், பரிசல் ஓட்டி: ரூ.10ஆயிரம் கொடுத்து பரிசல் வாங்கினேன். மழை வந்தால் பரிசல் ஓட்ட மாட்டோம். இங்கே மீன்பிடிக்க முடியாது. காற்று அதிகமாக வீசினால் பரிசலை செலுத்துவது கஷ்டம். நால்வரும் ஒரே திசையில் அமர்ந்தாலும் பரிசல் ஆட்டம் காட்டும். சில இடங்களில் மண் சேறு அதிகமாக இருந்தாலும் பரிசல் சிக்கும். இதையெல்லாம் சமாளித்து பரிசல் ஓட்டும் போது சுற்றுலா பயணிகள் பாராட்டுவது சந்தோஷம்.

தமிழ்ச்செல்வி, குழுத்தலைவி : ஒரு நாளில் அதிகபட்சமாக 200 பயணிகளே வரமுடியும். வந்தவுடன் கட்டஞ்சாயா தருகிறோம். அனைவரும் பரிசலில் சென்று வந்த பின் மதிய உணவு சமைத்து வழங்குகிறோம். பிரியாணி, ரசம், தயிருடன் எங்களது கேப்பைக்களி உருண்டை, சிக்கன் குழம்பு, வெங்காய தொக்கு ஸ்பெஷலாக பரிமாறுகிறோம். விருந்தினர்களுக்காக 16 வகையான உணவு சமைத்து தருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுற்றுலா பார்க்க : 94899 68480.

பவானி பரவசம்

கொளுத்தும் வெயிலிலும் பவானி ஆற்றில் கால் வைத்தால், நம்மை சிலிர்க்க வைக்கும் அளவுக்கு குளிர்ச்சி இருக்கிறது. சிறு பாறைகளை கடந்து கூழாங்கற்களை தொட்டபடி சலசலத்து வரும் பவானி ஆறு பரவசத்தின் ஊற்று. ஆழமற்ற அகன்ற ஆற்றில் படுத்தபடி அண்ணாந்து ஆகாயத்தை பார்ப்பது அதிசயத்தின் உச்சம். இதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.








      Dinamalar
      Follow us