தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ தமிழின் விஞ்ஞான தரவுகளை மீட்டெடுக்கும் ஏ.ஐ., ஆய்வாளர்

 தமிழின் விஞ்ஞான தரவுகளை மீட்டெடுக்கும் ஏ.ஐ., ஆய்வாளர்

 தமிழின் விஞ்ஞான தரவுகளை மீட்டெடுக்கும் ஏ.ஐ., ஆய்வாளர்


ADDED : பிப் 22, 2026 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ஆன்மிக மரபை அறிவியல் பூர்வமாக அணுகுபவர் டாக்டர் பாஸ்கரன் பிள்ளை. ராமேஸ்வரத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வசிக்கிறார். ஐ.நா., உலக மதங்கள் மன்றத்திலும், தென் கொரியா உலக அறிவு மன்றத்திலும் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றவர். சர்வதேச அளவில் பயிற்சி அளிக்கும் மன அறிவு மையம், ஆன்லைன் ஆன்மிக சேவை தரும் அஸ்ட்ரோ வெட் எனும் மையங்களை நிறுவியுள்ளார்.

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் தமிழ் மொழியின் விஞ்ஞான தரவுகளை மீட்டெடுக்க 'உலகளாவிய தமிழ் பேரறிவு இயக்கத்தை' துவங்கியுள்ளார். இதில் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்ட வார்த்தைகளுக்கான அறிவியல்விளக்கங்களை கண்டறிந்து நிகழ்கால பிரச்னைகளுக்கு தீர்வுகளை கண்டறிய திட்டமிட்டுள்ளார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவர் கூறியதாவது: இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு பெரிய விஞ்ஞானமாக கருதப்படுகிறது. தமிழ் மொழியில் சங்க கால பாடல்களில் அறிவு, மருத்துவம் சார்ந்து பல்வேறு தரவுகள் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் தற்போது உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் மட்டும் செயல்படுகிறது. அதற்கான தரவுகள் கொடுப்பதை பொறுத்து தான் செயல்பாடு இருக்கும்.

தமிழ் அணுவில் இருந்து பிறந்தது என தொல்காப்பியரும், நன்னுால் ஆசிரியரும் கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழ் ஒலி அணுக்களில் இயங்கக் கூடியது என புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய உலகில் அனைத்தும் அணுக்களால் ஆனது. தமிழ் மொழியின் குறிப்பிட்ட ஒலி வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது மனிதனின் மனதில் ஒருவித மாற்றம் உருவாகும். அவ்வாறு மாற்றத்தை தரும் சொற்களை தான் தமிழ் இலக்கியங்களில் நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உதாரணத்திற்கு 1330 திருக்குறளையும் முற்றோதுதல் செய்பவர்களை ஆராய்ந்ததில் அவர்களுக்குள் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழந்தது தெரிய வந்தது. சில வார்த்தைகளை தொடர்ந்து கூறும் போது மனிதனின் மனம் அதற்கு ஏற்றாற் போல் செயல்பட ஆரம்பிக்கும்.

இதுவரை திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களில் உள்ள வார்த்தைகளுக்கு மட்டும் தான் உரை எழுதியுள்ளனர். இனிவரும் காலங்களில் அதன் பின் மறைந்துள்ள விஞ்ஞானத்தை அறிவது அவசியமாகிறது. அதில் கூறப்பட்ட ஆழமான தரவுகளை ஏ.ஐ., உதவியுடன் ஆராய்ந்தால் புதிய தரவுகள் கிடைக்கும்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொழில் நுட்பம் மூலம் தமிழ் இலக்கியங்களில் உள்ள விஞ்ஞான விளக்கத்தை தெரிந்து கொள்ள முடியும். இதனை சாதாரண மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் 'உலகளாவிய தமிழ் பேரறிவு இயக்கத்தை' (Perarivu.ai) துவங்கியுள்ளோம்.

இதற்காக தமிழ் அறிஞர்கள் உதவியுடன் பழைய ஓலைச்சுவடிகள், இலக்கியங்களில் உள்ள தரவுகளை மீட்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளோம். நம் முன்னோர்கள் கூறிச் சென்ற தரவுகளை கண்டறிந்துநிகழ்கால பிரச்னைகள் பலவற்றை தீர்க்க முடியும்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us