Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/The She Unit டான்ஸ் ஆடுவோம்... மனசை லேசாக்குவோம்!

The She Unit டான்ஸ் ஆடுவோம்... மனசை லேசாக்குவோம்!

The She Unit டான்ஸ் ஆடுவோம்... மனசை லேசாக்குவோம்!


UPDATED : மே 02, 2026 03:39 PM

ADDED : மே 02, 2026 03:00 PM

Follow on Google

UPDATED : மே 02, 2026 03:39 PM ADDED : மே 02, 2026 03:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாய்பாபா காலனியை சேர்ந்த இளம்பெண்கள் சஞ்சனா, ஹரிஷ்மிதா, ஸ்வேதா, நிஷிதா, அஷ்விதா, சுபஸ்ரீ, அகல்யா.

இவர்கள் இணைந்து உருவாக்கிய 'The She Unit' இன்று, கோவை இளைஞர்களை பேச வைக்கும் பிரபல நடனக்குழுவாக மாறியுள்ளது.

''6ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் பிரெண்ட்ஸ். ஸ்கூல் கலாசார விழாக்கள், போட்டி மேடைகளில் அவ்வப்போது ஆடிய டான்ஸ்தான், இன்று இந்த லெவலுக்கு கொண்டு வந்துள்ளது,'' என்கிறார் சஞ்சனா.

அதன் பின் நண்பர்கள் அளித்த உற்சாகம் பெரிய பூஸ்ட் அளிக்க, ரொம்பவே 'இம்ப்ரெஸ்' ஆகிப் போன ஆசிரியை சந்தியா பப்பெட், ஒரு ஸ்பீக்கர் வாங்கி கொடுத்துள்ளார். இது, டான்ஸ் பயிற்சியை அடுத்த லெவலுக்கு கொண்டு போக உதவியுள்ளது.

பள்ளி முடியும் வரை விடுமுறை நாட்களில் மட்டும் நடந்த பயிற்சியும் முயற்சியும், பிளஸ் 1 படிக்கும்போது சமூக வலைதளத்தில் கால் பதிக்கும் தைரியத்தை தந்தது.

'The She Unit' ன்ற பெயரில் இன்ஸ்டாவில் நடன வீடியோக்களை வெளியிடத் தொடங்கிய இக்குழு, குறுகிய காலத்திலேயே கவனம் பெற்றது.

கிடைத்தது டான்ஸ் புளோர்! 2022-ல் தான் அந்த பெரிய மாற்றம் நடந்தது. அது இலவசமாக டான்ஸ் புளோர் கிடைத்ததே அந்த மாற்றம். குழுவில் உள்ள ஸ்வேதாவின் பாட்டி சாய்பாபா காலனியில் ஒரு இடத்தை இலவசமாக வழங்கினார். அந்த இடம் இன்று பெரிய டான்ஸ் புளோராக மாறியுள்ளது.

''அங்கு தினமும் துவங்கிய பயிற்சி பல வீடியோக்களாக உருமாறியது. choreography, corporate events, stage competitions என அடுத்தடுத்த படிகளை ஏறத் தொடங்கினோம். அதன் பிறகுதான் எங்கள் குடும்பத்தினர், 'இவர்கள் ஏதோ உருப்படியாக செய்கிறார்கள்' என்பதை உணர்ந்து பெரியளவில் சப்போர்ட் செய்யத்துவங்கினர்,'' என்கிறார் ஸ்வேதா.

'The She Unit குழுவின் கனவு, வெறும் நடனம் மட்டுமல்ல. உலகளவில் BTS உருவாக்கிய குழு ஒற்றுமை, தனித்த அடையாளம், ரசிகர் ஆதரவு, self -branding ஆகிய கருத்துகளை முன்மாதிரியாகக் கொண்டு, “பெண்கள் டான்ஸ் குழு' ஆக உலகளவுக்கு செல்ல வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

நடனத்தைத் தாண்டி தங்களது படைப்பாற்றலை இசையிலும் வெளிப்படுத்திய இக்குழு, 'What The Heck' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுத்தல், சமூகப் பணிகளில் பங்கேற்பது போன்ற செயல்களிலும் உதவ தயங்குவதில்லை.

பிராண்ட் புரமோஷன் ஷூட்டிங், கமர்ஷியல் டான்ஸ் வீடியோக்கள் வாயிலாக வருமானமும் கொட்டுவதால் உற்சாகத்துக்கு குறைவில்லை. ஒரு ஹாபியை வருமானம் தரும் தொழிலாக மாற்றிய பெருமையை, இவர்கள் ஒவ்வொருவரிடமும் காண முடிகிறது.

கல்லூரி நேரத்துக்கு பிறகு மொபைல் போனில் மூழ்கி லைக்ஸ், கமென்ட்சுக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினரில் இருந்து இவர்கள் தனித்து நிற்கிறார்கள்.

''இந்த பாயின்டை நாங்கள் எல்லோரும் சொன்னதாக போட்டுக்கொள்ளுங்கள். தேவையற்ற பழக்கங்களில், சிந்தனைகளில் சிக்காமல் இருக்க, இந்த நடனம் எங்களுக்கு உதவுகிறது. We love dance...we love music!'' என்று கோரசாக கூறினர்.

வண்டியை கிளப்பி அலுவலகம் வந்து சேரும் வரை, இந்த கோரஸ் ஒரு இனிய பாடல் போல் ஒலித்துக்கொண்டிருந்தது!

'The She Unit குழுவின் கனவு, வெறும் நடனம் மட்டுமல்ல. உலகளவில் BTS உருவாக்கிய குழு ஒற்றுமை, தனித்த அடையாளம், ரசிகர் ஆதரவு, self -branding ஆகிய கருத்துகளை முன்மாதிரியாகக் கொண்டு, “பெண்கள் டான்ஸ் குழு' ஆக உலகளவுக்கு செல்ல வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap