
தமிழகத்தில் முருகப்பெருமான் தனக்கு கிடைக்க வேண்டிய ஞானப்பழம் கிடைக்காமல் கோபித்துக் கொண்டு கயிலாயத்தில் இருந்து தனது பெற்றோர்கள் மற்றும் சகோதரர் மீது வெறுப்புற்று பண்டார கோலத்தில் பழநி மலையில் குடியேறிய நாளான தைப்பூச திருவிழா, தமிழகத்தில் மட்டுமில்லாமல், பெரும்பாலான வெளிநாடுகளிலும், குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் அவர்களின் உள்ளூர் திருவிழாக்களுக்கு இணையாக அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு பயபக்தியுடன் பால்குடம் ஏந்தியும், அலகு குத்துதல், காவடி எடுத்தல் மற்றும் தீ மிதித்தல் என்று தமிழகத்தில் நடைபெறுவது போல சிறப்பாக நடைபெறுவது, பழமையான இந்துக் கடவுள் முருகனின் அருள் கடாட்சம், பாரெங்கும் பரவி உள்ளதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது..
அப்பேற்பட்ட தைப்பூச விழா, பல நூற்றாண்டுகளாக தமிழக கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டுள்ள தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்திலும் கடந்த 11/2/25 செவ்வாய் கிழமை அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement