/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்க செனட்டிற்குத் தேர்வான தமிழர் சுஹாஸ் சுப்ரமணியத்திடம் நச்சென்று இரண்டு கேள்விகள்!
/
அமெரிக்க செனட்டிற்குத் தேர்வான தமிழர் சுஹாஸ் சுப்ரமணியத்திடம் நச்சென்று இரண்டு கேள்விகள்!
அமெரிக்க செனட்டிற்குத் தேர்வான தமிழர் சுஹாஸ் சுப்ரமணியத்திடம் நச்சென்று இரண்டு கேள்விகள்!
அமெரிக்க செனட்டிற்குத் தேர்வான தமிழர் சுஹாஸ் சுப்ரமணியத்திடம் நச்சென்று இரண்டு கேள்விகள்!
ஜன 14, 2025

சமீபத்திய அமெரிக்க தேர்தலில் வர்ஜீனியா பகுதி செனாட்டராக ( நம் MPபோல )கமலா ஹாரிஸ் சார்ந்த டெமோக்ரடிக் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர் தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த சுகாஸ்சுப்ரமணியம்.
அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில் அவருடனான எனது (21/-11/-24) சந்திப்பை பகிர்வதில் சந்தோஷம். வாங்க பார்லிமென்ட் வளாகம் முன் நின்று படம் எடுக்கலாம் என அவர் அழைத்துப் போய்..ரொம்ப எளிமை.
“நீங்கள் எதற்காக டெமோக்ரடிக் பார்டியை தேர்வு செய்தீர்கள் ”
என்று கேட்டதும் அவரிடமிருந்து அருவியாய் பதில் கொட்டிற்று.
“ அமெரிக்காவில் நம் கம்யூனிட்டியை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் என்ரோல்மென்ட் புரடெக்ட் செய்ய வேண்டும். இதை இரண்டையும் டெமாக்ரேட் பார்ட்டி நன்றாக செய்வார்கள் என்று தான் அதற்கு சப்போர்ட் செய்கிறேன். அத்துடன், விலைவாசிமற்றும் பொருளாதாரத்தையும் சரி பண்ண வேண்டும். இதையும் டெமாக்ரேட் பார்ட்டி சரியாக செய்கிறார்கள். இருந்தாலும் எல்லா நேரங்களிலும் அவர்கள் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் முக்கால்வாசி விஷயம் அவர்கள் செய்வது சரி என்று நான் நினைக்கிறேன்.
“இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடைப்பதில் உள்ள தாமதத்தை சரி செய்ய முனைவீர்களா?”
இந்தியா மாதிரியான ஒரு நாட்டிற்கு வருடத்திற்கு இவ்வளவுதான் கிரீன் கார்டு கொடுக்க வேண்டும் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். இந்தியா மட்டுமில்லை இந்த சட்டம் ஆஸ்திரேலியா முதல் பலநாடுகளுக்கும் பொருந்தும். இதில் என்ன பிரச்னை என்றால்... ஒவ்வொரு நாட்டுக்கும் கோட்டா இருப்பதால் இந்தியாவிலிருந்து நிறைய பேர்கள் மனு போடுவதால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. அனைவருமே லீகலாகதான் வந்திருக்கிறார்கள். வரிகளையும் நல்ல முறையில் செலுத்துகிறார்கள். அதனால் இந்த மாதிரி கோட்டா சிஸ்டத்தையே எடுத்து விடவேண்டும் என்பது தான் என் விருப்பமும். ஒரு லட்சம் கிரீன் கார்டு இருக்கிறது என்றால் முதலில் வருபவர்களுக்குத்தான் கிடைக்கணும். இதை நான் வலியுறுத்துவேன்.” என்றார் நம்பிக்கையுடன்.
அவருக்கு தாமரை பிரதர்ஸ் பதிப்பக நூலான தினமலர் அந்துமணி அவர்களின் பா.கே. ப --பகுதி 23 ஐ அன்பளிக்க, மகிழ்ந்தார். அத்துடன் எனது .. கனவில் மிதப்போம் மற்றும் சில நூல்களையும் அவருக்கு வழங்கியதில் பெருமிதம்.
- என்.சி.மோகன்தாஸ் with அபர்ணா பிரசன்னம்