/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அன்னை தமிழ் மன்ற இலவச தமிழ் பயிற்சி முதலாம் ஆண்டு விழா
/
அன்னை தமிழ் மன்ற இலவச தமிழ் பயிற்சி முதலாம் ஆண்டு விழா
அன்னை தமிழ் மன்ற இலவச தமிழ் பயிற்சி முதலாம் ஆண்டு விழா
அன்னை தமிழ் மன்ற இலவச தமிழ் பயிற்சி முதலாம் ஆண்டு விழா
ஏப் 20, 2024

பஹ்ரைனில் பல்வேறு சேவைகளை செய்து வரும் அன்னை தமிழ் மன்றம் பஹ்ரைன் நாட்டில் உள்ள தமிழ் குழந்தைகளுக்காக இலவச தமிழ் பயிற்சியை கடந்த ஒரு ஆண்டு காலமாக நடத்தி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 18 மாலை 7 மணி அளவில் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் குழந்தைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் குழந்தைகளைக் கொண்டு தமிழர்களின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், கோலாட்டம், வில்லுப்பாட்டு மற்றும் தேசபக்தி பாடல்கள் ஆகியவை நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் நிகழ்வின் முக்கிய அம்சமாக கடந்த ஒரு வருடமாக இலவசமாக தமிழ் பயிற்சி வழங்கிய ஆசிரியைகள் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் முக்கிய விருந்தினராக கோபிநாத் மேனன் (தலைமை ஆசிரியர் நியூ இந்தியன் பள்ளி), கௌரி சங்கர் (இயக்குனர் வணிகம் மற்றும் நிறுவன பிரிவு அகிலியா பல்கலைக்கழகம்), சுரேஷ் (பேராசிரியர் மல்டி மீடியா பிரிவு அகிலியா பல்கலைக்கழகம்), பொன்சங்கர பாண்டியன் (சொல்வேந்தர் மன்றம் பஹ்ரைன்), பிரான்சிஸ் (இயக்குனர் பஹ்ரைன் மீடியா சிட்டி), சுரேஷ் (நிறுவனர் ஹரிசான் கன்ஸ்டிரக்ஷன்) ஆகியோர் ஆசிரியர்களை கௌரவித்தனர் .
இறுதியாக அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் G.K, பொதுச் செயலாளர் தாமரை, கண்ணன், நிகழ்வின் பொறுப்பாளரும் தமிழ் வளர்ச்சி துறை செயலாளருமான அருள் கணேசன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழா இரவு உணவுடன் இனிதே நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்
Advertisement