/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பாரஅத் இரவு நிகழ்ச்சி
/
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பாரஅத் இரவு நிகழ்ச்சி
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பாரஅத் இரவு நிகழ்ச்சி
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பாரஅத் இரவு நிகழ்ச்சி
பிப் 15, 2025

அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பாரஅத் இரவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சங்க தலைவர் ஜமாலுதீன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் அப்பாஸ்வரவேற்புரை நிகழ்த்தினார். அய்மான் மார்க்கத்துறை செயலாளர் மௌலவி ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துவக்கவுரை நிகழ்த்தினார். மௌலவி என்.எஸ். அப்துல் காதிர் சிராஜி சிறப்புரை நிகழ்த்தினார். மூன்று முறை யாசீன் ஓதப்பட்டது. தஸ்பீஹ் தொழுகை நடத்து துஆ செய்யப்பட்டது.
நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகைதீன் அப்துல் காதர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பைத்துல்மால் தலைவர் அதிரை சாகுல் ஹமீது, மீரான் ஆவை அன்சாரி உள்ளிட்ட குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement