/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபியில் இந்திய மாம்பழ திருவிழா
/
அபுதாபியில் இந்திய மாம்பழ திருவிழா

அபுதாபி: அபுதாபியில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் இந்திய மாம்பழ திருவிழா நடந்தது. விழாவை இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தொடங்கி வைத்தார். லூலூ ஹைப்பர் மார்க்கெட்டின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. யூசுப் அலி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்திய அரசின் வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பனாரசி லங்டா, தசேரி, சவுசா, அம்ரபல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை அமீரகத்தைச் சேர்ந்தவர்களும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் இந்திய மாம்பழ விற்பனை சூடு பிடித்தது. மேலும் பலர் இந்திய மாம்பழங்களின் சிறப்பு குறித்து பெருமிதம் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement