sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஜெத்தாவில் கலாரத்னா நடனப் பள்ளியின் “பாரம்பரியக் கலைத் திருவிழா

/

ஜெத்தாவில் கலாரத்னா நடனப் பள்ளியின் “பாரம்பரியக் கலைத் திருவிழா

ஜெத்தாவில் கலாரத்னா நடனப் பள்ளியின் “பாரம்பரியக் கலைத் திருவிழா

ஜெத்தாவில் கலாரத்னா நடனப் பள்ளியின் “பாரம்பரியக் கலைத் திருவிழா


ஜூலை 02, 2025

Google News

ஜூலை 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடன கலைஞர்கள் ஸ்ரீதா அனில்குமார், அனில்குமார் மரக்கத் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜெத்தாநகரில் நடனக்கலையில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி, இந்திய பாரம்பரிய நடனங்களின் மகத்துவத்தை உலக அரங்கில் பறை சாற்றி வருகின்றனர்.



நான்கு ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பல வகையான நடனங்களிலும் பயிற்சி அளித்து, இந்த நிகழ்வை ஒரு கண்கொள்ளா திருவிழாவாக மாற்றினர்.மோகினியாட்டம், கதக், திருவாதிரை, ஓப்பனா திரைப்பட நடனங்கள், தாதிய என பல மொழிகளின் சங்கமம், பல்வேறு கண்கவர் நடனங்கள் மாணவர்களால் அளிக்கப்பட்டு, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.



ஸ்ரீதா அனில்குமார், கலா ரத்னா நடன பள்ளியின் ஒருங்கிணைப்பாளர், சிறுவயதில் இருந்து நடனத்தில் பயணத்தைத் தொடங்கி இன்று வரை ஒரு வாழ்நாள் கலைஞராக விளங்குகிறார். பள்ளி மற்றும் தொழில்முறை அளவில் பலவிதமான மேடை நடன அனுபவங்களைப் பெற்று, முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் ஆழமான படைப்பாற்றலை கலந்த ஓர் தனித்துவமான நடன பாணியை உருவாக்கியுள்ளார்.



அவருடைய நடன முறைகள் மாணவர்களின் மனதையும் திசையையும் மாற்றி, அவர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துவது, அவரது வழிகாட்டுதலில், மாணவர்கள் நேரத்தையும் ஆர்வத்தையும் செலுத்தி, பாரம்பரிய மற்றும் சமகால, நாட்டுப்புற மற்றும் திரைப்பட நடன பாணிகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த சிறப்பான விழா, அதன் நிர்வாக அணியினர் அமீர் பரப்பனங்காடி, ரசாக் மம்புரம், ரஃபி, முஸ்தபா, ஹரி, தாஜ் மன்னார்காடு, ரீதா, பௌர்ணமி டீச்சர், அஜி டீச்சர், ஷைலஜா, லிஸ்ஸி ஆகியோரின் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறுவதை உறுதி செய்தது.



பேபி நீலாம்ப்ரா இந்நிகழ்வில் 2025_-26 ஆம் ஆண்டுக்கான 'SIF' (சவூதி இந்தியன் கால்பந்து ஃபெடரேஷன் ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்து, அன்பின் அடையாளமாக கௌரவிக்கப்பட்டார். முக்கிய விருந்தினர்களாக நிகழ்வில் அஷ்ரஃப்சுக்கான், பாகிஸ்தானி பாடகர் அத்னான், அப்துல்லா முகன்னி, ஊடகவியலாளர்கள் ஜாபர் அலி பாலக்கோடு, சாதிகலி தவூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



ஜெத்தா தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்து கொண்ட மூர்த்தி, 'ஒவ்வொரு நடன கலைஞரும் தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் மேடை முழுவதும் மின்ன வைத்தனர்' என்றார். அல் அமான், 'இது ஒரு அற்புதமான திறமை மற்றும் கலாச்சாரத் திருவிழா; ஒவ்வொரு நிகழ்வும் சிறந்த நடன வடிவமைப்பு , வண்ணமயமான ஆடைகள் மற்றும் துல்லியமான ஒத்துழைப்பு மூலம் ஒரு சிறந்த அனுபவத்தை இந்த விழா வழங்கியது என்றார்



- நமது செய்தியாளர் M Siraj




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us