/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் மீலாதுன்நபி விழா
/
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் மீலாதுன்நபி விழா
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் மீலாதுன்நபி விழா
கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் மீலாதுன்நபி விழா
நவ 13, 2024

கத்தார் : கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் புனித மீலாதுன் நபி விழா மற்றும் சங்கைமிகு மாபெரும் தவசீலர் குதுபு நாயகம்(ரலி) அவர்களின் நினைவு தினவிழா 25-10-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணி முதல் இரவு 7.30 மணிவரை கத்தார் முஸ்ரிபில் அஸ்ஸயிது எஸ்.ஆர்.எம். அப்துல் ஹை மௌலான தலைமையில் சங்கைமிகு அஹ்லுல்பைத் திருக்குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது.
முஹம்மது அர்ஷத் கிராஅத் ஓதினார். நிகழ்ச்சியை செய்யிது முபீஸ் மௌலானா தொகுத்து வழங்கினார். ஹுசைன் அலி நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீதை வாசிக்க தொடர்ந்து நாயகம் (ஸல்) அவர்களின் 34-வது தலைமுறை திருப்பேரர் குத்புஸ்ஸமான் செய்யிது கலீல் அவ்ன் மௌலானா நாயகம் அவர்களின் அமுத மொழி வாசிக்கப்பட்டது. கத்தார் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை செயலாளர் அப்துல் வஹாப் வரவேற்புரை மற்றும் இறைப்புகழ், நபி மொழி குதுபு நாயகம் புகழ்ப்பாடி தனது குழுவினருடன் வழங்கினார்.
இந்தியாவிலிருந்து ஜூம் இணைவழி மூலமாக கூத்தாநல்லூர் அல் ஜாமிஆ ஷஜகத்துன் தய்யிபா ஃபீ தஃவத்தில் இஸ்லாமிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி நிறுவனரும் முதல்வருமான மௌலவி ஹாஃபிழ் ஏ.கே.ஏ ஷர்புத்தீன் பைஜி ஹக்கியுள் காதிரி நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குதுபு நாயகம் (ரலி) அன்னவர்களின் ஆளுமையை சிறப்பாக எடுத்துரைத்து நாயகம் (ஸல்) அவர்களின் அஹ்லுல்பைத்களை பின்பற்றினால், இஸ்லாமிய மார்க்கத்தை சிறப்பாக பின்பற்ற முடியும் என்று கூறி சிறப்புரையாற்றினார்.
எம். முஹம்மது யூசுப் நன்றி கூற, யாநபி பைத், குதுபு நாயகம் புகழ் கஸீதா ஓதப்பட்டு துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் ஃபதுலல்லாஹ் மௌலானா செய்யது மில்பர் அலி மௌலானா, சாதிக் காக்கா, ஷாம்லி காக்கா, முனிர் காக்கா மற்றும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் ரபியுல் அவ்வல் 1 முதல் 11 வரை நபிகள் நாயகம் பெயரில் மௌலவு ஷெரீபும் ரபியுல் ஆகிர் மாதம் 1 முதல் 11 வரை குத்பு நாயகம் பெயரில் மௌலது ஷெரீபும் ஓதப்பட்டது.
இந்நிகழ்வுகளில் கத்தார் நாட்டின் அரச குடும்பத்தினருக்கும் நாட்டு மக்களுக்கும் நலன்கள் வேண்டி பிரார்த்திக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement