sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் திருக்குறளை கையால் எழுதி புத்தகமாக வெளியிட்டு சாதனை

/

துபாயில் திருக்குறளை கையால் எழுதி புத்தகமாக வெளியிட்டு சாதனை

துபாயில் திருக்குறளை கையால் எழுதி புத்தகமாக வெளியிட்டு சாதனை

துபாயில் திருக்குறளை கையால் எழுதி புத்தகமாக வெளியிட்டு சாதனை


மே 29, 2024

Google News

மே 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : ஓடி விளையாடு என்ற ஓவி தமிழ்குழுமம் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நமது தமிழ் குடும்பங்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது. குழந்தைகள் நமது பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பான தம் குழந்தைகள் பிறரிடம் நல்ல முறையில் பழகவும் தமிழில் பேசி மகிழவும் சிறப்பான முறையில் மாதந்தோறும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.

முதலில் 4 குடும்பங்களுடன் தொடங்கப்பட்ட ஓடி விளையாடு குழுவானது தன் ஓராண்டு இறுதியில் 40 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் பொங்கல் விழாவினை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தது. குழுவின் அடுத்த முன்னெடுப்பாக குழந்தைகளுக்குத் இலவசமாகத் தன்னார்வலர்களைக் கொண்டு அவரவர் வசிக்கும் பகுதிகளில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.



இதில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாதந்தோறும் ஒன்று கூடல், பொங்கல், தமிழ் புத்தாண்டு, விழாக்கொண்டாட்டம் என 2020ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்தது. பின்னர் கொரானா பரவல் காரணமாக ஒன்றுகூடல் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் இணையவழியில் தமிழ் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.



அடுத்த முயற்சியாக 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் அமீரக அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக OV (FZE) என்ற பெயரில், இம்முறை தமிழ் மட்டுமல்லாது மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் அமைப்பாக OV Tutoring services என்ற பெயரில்தொடங்கப்பட்டுள்ளது. இதில் இணையவழியில் தமிழ், இந்தி, பிரெஞ்சு என மொழி பாடங்கள் மட்டுமல்லாது பிற அனைத்து பாடங்களுக்கான வகுப்புகளும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் மூலம் கற்பிக்கப்படுகிறது.



பள்ளிப்பாடம் மட்டுமல்லாது குழந்தைகளுக்கு கையெழுத்து, வடிவெழுத்து, கோடிங், மனக்கணிதம், பொனிக்ஸ், வேதம் என மேலும் பல திறன் வளர் வகுப்புகளும் கற்பிக்கப்படுகின்றன. ஓ.வி. கல்வி பயிற்சி மையம் மற்றும் ஓ.வி. குழுமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச இணைய வழிப் பயிற்சி வகுப்புகள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது.



குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல்,கவனித்தல், பேசுதல் என திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கிட்ஸ் கிளப் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு சிறப்பம்சமாக ஒவியம் என்ற இணையவழி தமிழ்மாத இதழ் 2023 ம் ஆண்டு மே மாதம் முதல் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து படைப்புகள் பெறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



இதனைத் தொடர்ந்து ஓ.வி. கல்வி பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் பெரியவர்களால் 1330 குறள்கள் கைகளால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்ட திருக்குறள் புத்தகம் இணையவழியில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. மார்ச் 2024 இல் தொடங்கப்பட்ட இம்முயற்சியானது ஏப்ரல் 2024மாதம் மாணவர்கள், பெரியவர்கள் என 188 நபர்களால் 1330 திருக்குறள்கள் கைகளால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டு இணையவழியில் வெளியிடப்பட்டது . இதில் பெற்றோர் குழந்தைகள் என குடும்பமாக பங்கு பெற்றது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். இதில் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாது இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கலாம் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



இம்முயற்சியினை வெற்றிபெறச் செய்த பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் குழுவினருக்கும் ஓ.வி. கல்வி பயிற்சி மையத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவிக்கும் விதமாக விருது வழங்கும் விழா கடந்த 26 -ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 70 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக அமீரக தமிழ் தொழில்முனை கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் பால் பிரபாகர், தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரிய வளைகுடா உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் விழாவை கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



தன்னார்வலர் மற்றும் சமூகசேவகர் முதுவை ஹிதாயத்தும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சாய்ஷா இந்தியா, லிட் த லைட் போன்ற அமைப்புகளில் தன்னார்வலராக பங்காற்றி வரும் அகிலாதேவி குமரன், ஷார்ஜா பேஸ் சர்வதேச பள்ளிக்கூடத் தமிழ்துறை தலைமை ஆசிரியர் ஷோபியா துரைராஜ் ஆகியோரும் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். .



கலாம் உலக சாதனை நிகழ்வில் பங்குபெற்றவர்கள் மற்றும் திருக்குறள் புத்தகத்தை உருவாக்க உதவிபுரிந்த தன்னார்வலர்களுக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டு பாராட்டப்பெற்றனர். மேலும் ஓவியம் தமிழ்மாத சிறுவர் தமிழ்மாத இதழில் கடந்த ஒரு வருடமாக தங்கள் படைப்புகளை அனுப்பி தொடர்ந்து ஆதரவளித்து வரும் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர்



குழந்தைகளை மையப்படுத்தி இயங்கிவரும் ஓவி குழுமமானது இம்முறை மாணவர்களை தன்னார்வலர்களாக அறிமுகம் செய்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் பணியாற்ற வைத்து ஊக்குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை பாராட்டும் விதமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் பாட்டு, நடனம்,பாடல், பேச்சு,திருக்குறள் ஒப்புவித்தல், இசைக்கருவி மீட்டுதல் என கலைநிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்குபெற்று விழாவிற்கு மேலும் அழகு சேர்த்தனர்.



ஓடிவிளையாடு (OV) என்ற பெயருக்கேற்ப திருக்குறள் தொடர்பான விளையாட்டு நிகழ்த்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக விழாவினை சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.



- நமது செய்தியாளர் காஹிலா




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us