/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் இலக்கியங்கள் நூல் வெளியீடு
/
சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் இலக்கியங்கள் நூல் வெளியீடு
சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் இலக்கியங்கள் நூல் வெளியீடு
சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் இலக்கியங்கள் நூல் வெளியீடு
ஜூலை 09, 2025

சிங்கப்பூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் சிங்கை முன்னோடித் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலினை உயிர்மெய் பதிப்பாளரும், திரைப்பட இயக்குனருமான மில்லத் அகமது அறிமுகம் செய்தார்.
இந்த நூலில் சிங்கப்பூரின் முதல் இலக்கியமான 1868இல் வெளியான நன்னெறித் தங்கம் பாட்டு, சிங்கப்பூரில் முதலில் அச்சிடப்பட்ட முதல் தமிழ் நூலான முனாஜாத்து திரட்டின் மறுபதிப்பான நாகூர் நாயகரைப் பாடும் கீர்த்தனைத் திரட்டு, சிங்கை நகர் அந்தாதி, சித்திரக்கவிகள், குதிரைப் பந்தய லாவணி, சிங்கப்பூர் இலக்கியத்தில் முதல் இசைப் பாடல் ஆகிய ஆறு அரிய சிங்கப்பூரின் முன்னோடி இலக்கியங்களை தமிழ் பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன் தொகுத்திருக்கிறார்.
அன்று இந்துக் கடவுள்களைப் பற்றிய கவிதை நூல்களான சிங்கை நகர் அந்தாதி, சித்திரக்கவிகள் ஆகிய நூல்களைச் சி.கு.மகுதூம் சாயபு என்ற இஸ்லாமியர் தமது தீனோதய இயந்திர சாலையில் அச்சிட்டார். அதுபோல 138 ஆண்டுகள் கழித்து இந்த இலக்கிய நூல்களை உயிர்மெய் பதிப்பகத்தில் மில்லத் அகமது வெளியிடுவது, இன்றும் சிங்கப்பூரில் மதநல்லிணக்கமும், சமுதாயச் சிந்தனையும் வாழ்கிறது என்பதை குறிப்பிட்டுக் கூறினார்.
பின்பு பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பன் தமது ஏற்புரையில், இந்நூலாக்கத்திற்கு உதவியவர்களுக்கு நன்றி கூறினார். சிங்கப்பூரில் தனது செயல் திறமையால் தளராது சிங்கப்பூரில் புத்தகத் திருவிழாவை நடத்திய எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பனுக்கு பாராட்டு தெரிவித்தார். சிங்கைநகர் அந்தாதி, சித்திரக்கவிகள் இரண்டும் புலவர் இலக்கியத்தைச் சார்ந்தவை. குதிரைப் பந்தய லாவணி, நன்னெறித் தங்கம் பாட்டு இரண்டும் சமுதாய இலக்கிய நூல்கள். முதல் இசைப் பாடல், கீர்த்தனைத் திரட்டு இரண்டும் இசையோடு பாடக்கூடிய இலக்கியங்கள். இந்த ஆறு நூல்களையும் நீங்கள் படித்து இன்புற வேண்டும் என்ற நோக்கத்தில், சிங்கப்பூரில் வைரவிழா ஆண்டில் இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement