sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

தமிழ் கூறும் தலைமுறை - பதிவு நீடிப்பு

/

தமிழ் கூறும் தலைமுறை - பதிவு நீடிப்பு

தமிழ் கூறும் தலைமுறை - பதிவு நீடிப்பு

தமிழ் கூறும் தலைமுறை - பதிவு நீடிப்பு


மார் 04, 2024

Google News

மார் 04, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சியின் *பதிவு நாள் உங்களுக்கா க மார்ச் 22 க்கு நீடிக்கப்பட்டுள்ளதுவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் கூறும் தலைமுறை நிகழ்ச்சிக்காக இளந்தலைமுறையினரை இம்மாபெரும் போட்டியில் பங்கு பெற அன்புடன் வரவேற்கிறோம்.

வட அமெரிக்க அளவில் சிறந்து விளங்கும் தமிழ்ப் பேச்சாளர்களை உலக அரங்கின் முன்னிறுத்த வேண்டும் என்பதே இப்போட்டியின் தலையாய நோக்கம். இதற்காகத் தமிழ் கூறும் தலைமுறை சார்பாக தமிழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு பயிற்சிப் பட்டறைகளில் நம் மாணவர்களின் பேச்சுத்திறன் மெருகூட்டப்பட்டது.

கடந்த வருடம் பெற்ற வெற்றியின் உற்சாகம், இந்த வருடப் போட்டி மற்றும் பயிற்சிக்கான முன்னெடுப்புகளில் உங்கள் பேராதரவுடன் களம் இறங்குகிறோம். இவ்வருடம் இந்தப் போட்டிக்கான ஆரம்பச் சுற்றுகள் தமிழச் சங்க அளவிலோ அல்லது வட்டார அளவிலோ நடைபெறவில்லை. வயது வரம்பின் அடிப்படையில் வட அமெரிக்காவில் வசிப்பவர்கள் அனைவரும் நேரிடையாக எம் குழுவினர் நடத்தும் போட்டிகளில் பங்கு பெறலாம்.

போட்டியாளர்களின் பெயரை பதிவு செய்யக் கீழ்க்காணும் சுட்டியைப் பயன்படுத்தவும்.


Registration Link: http://tinyurl.com/Fetna-TKT- 2024
Junior::

10 வயது நிரம்பியவர்கள் முதல் - 14 வயது நடப்பில் உள்ளவர் வரை (2024 ஜூலை 1 அன்று)

Senior:

14 வயது நிரம்பியவர்கள் முதல் - 21 வயது நடப்பில் உள்ளவர் வரை (2024 ஜூலை 1 அன்று)

படிவத்தை அனுப்ப இறுதி நாள்: மார்ச் மாதம் 22, 2024 11:59 PM PST (கூடிய விரைவில் அனுப்பவும்)

வட அமெரிக்கத் தமிழ் உறவுகளின் ஆதரவுடன் நம் வெற்றிப் பயணம் அமெரிக்க மண்ணில் தொடரட்டும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு !
- பேரவை தமிழ் கூறும் தலைமுறை அணியினர்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us