நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தியால் குத்தினாலும், அரிவாளால் வெட்டினாலும் ஏற்படும் காயத்தை குணப்படுத்தலாம். ஆனால் மனதில் ஏற்படும் காயமான அகங்காரம் ஒருவரை அழித்து விடும். முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் ஒருவர் எல்லாம் தன்னால் தான் நடந்தது என தம்பட்டம் அடித்தால், எந்தளவுக்கு உச்சிக்கு போனாரோ அந்தளவுக்கு பாதாளத்தை அடைவார். 'அழிவுக்கு முன்னால் அகந்தை. விழுவதற்கு முன்னால் தற்செருக்கு' என்கிறது பைபிள்.

