sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : டிச 13, 2024 07:42 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏ.ராகவன், கால்காஜி, டில்லி: *பெற்றோரை புறக்கணித்தால்...

பெற்றோருக்கு செய்த பாவம் பல தலைமுறைக்கு தொடரும். இதற்கு பரிகாரமே கிடையாது.

அ.வரலட்சுமி, மாமண்டூர், காஞ்சிபுரம்: *விளக்கின் ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றணுமா...

பண்டிகை நாளில் ஐந்திலும், மற்ற நாளில் ஒன்றிலும் தீபம் ஏற்றுங்கள்.

பி.மாணிக்கம், சிவாஜி நகர், பெங்களூரு: *கார்த்திகை தீபத்தன்று மெழுகுவர்த்தி ஏற்றலாமா?

ஹிந்து மதத்தில் மெழுகுவர்த்திக்கு இடம் இல்லை.

எம்.ராஜிராதா, நாகமலை, மதுரை: *ஐயப்ப பக்தர்கள் தரையில் படுக்கலாமா?

விரத காலமான 41 நாளும் தர்ப்பை, கோரைப்புல், பனைஓலை பாய்களில் படுக்கலாம்.

பே.மிருளானி, மருதமலை, கோயம்புத்துார்: *சங்காபிஷேகம் நடத்துவது ஏன்?

அசுரனான சங்கசூடன் சாபம் பெற்றதால் கடலில் சங்காக மாறினான். கார்த்திகை திங்கள் அன்று சிவனுக்கு சங்கால் அபிஷேகம் செய்பவர்கள் நன்மை அடைய வேண்டும் என வரம் பெற்றான்.

வி.குமார், தச்சநல்லுார், திருநெல்வேலி: *ஒரு முக விளக்கை எந்த திசையில் ஏற்றலாம்?

கிழக்கு - துன்பம் தீரும்

மேற்கு - கடன் தீரும்

வடக்கு - பணம் சேரும்

தெற்கு - ஏற்றக் கூடாது

சி.முருகன், வில்லியனுார், புதுச்சேரி: *அகண்ட தீபம் என்றால்...

இடை விடாமல் எரியும் தீபம்.

தி.இலக்கியா, ஆண்டிபட்டி, தேனி: *மண் அகல் விளக்கின் சிறப்பு என்ன?

மண்ணால் ஆன அகல் விளக்கேற்ற மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். கிரக தோஷம், தீயசக்தி நெருங்காது.

ரா.ராஜா, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி: *எந்த எண்ணெய்யில் விளக்கேற்றக் கூடாது?

கடலை எண்ணெய், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய்.






      Dinamalar