sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அம்மாடியோவ்... அண்ணாமலை

/

அம்மாடியோவ்... அண்ணாமலை

அம்மாடியோவ்... அண்ணாமலை

அம்மாடியோவ்... அண்ணாமலை


ADDED : டிச 13, 2024 07:59 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.13., 2024 - திருக்கார்த்திகை

* திருவண்ணாமலை கோயிலின் பரப்பு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி (24 ஏக்கர்).

* 171 அடி உயரம் கொண்டது அம்மணியம்மாள் கோபுரம். விஜயநகர மன்னர்களால் தொடங்கிய இந்த கோபுரப்பணி, பாதியில் நின்றது. இதைக் கட்டி முடித்த அம்மணியம்மாளின் பெயரே தற்போது அழைக்கப்படுகிறது.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில், அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிச.12ல் அஞ்சல்துறை வெளியிட்டது.

* திருமூலர் பாடிய திருமந்திரத்தில் அடி முடி தேடிய திருவண்ணாமலை வரலாறு குறித்த ஒன்பது பாடல்கள் உள்ளன.

* ஓய்வில்லாமல் அன்னதானம் அளிக்கும் மடம் திருவண்ணாமலை திருவூடல் தெருவிலுள்ள ஓயாமடம்.

* செவ்வாயன்று திருவண்ணாமலையை சுற்றினால் மோட்சம் கிடைக்கும் எனச் சொன்னவர் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.

* லிங்கோத்பவர் தோன்றிய தலம் அண்ணாமலை. கருவறையின் பின்புறம் இவரது சன்னதி உள்ளது.

* திருவண்ணாமலையின் தலவிருட்சம் மகுட மரம்.

* அக்னி நட்சத்திர காலத்தில் அண்ணாமலையாருக்கு வாசனை திரவியம் கலந்த நீரால் அபிஷேகம் செய்வர். தயிர் சாதம் படைத்து, நீர் சொட்டும் தாரா பாத்திரத்தை லிங்கத்தின் உச்சியில் வைப்பர்.

* ரமணாசிரம வளாகத்தில் தலைவலி சாமியின் சமாதி உள்ளது. தலைவலி தீர இதை சுற்றுகின்றனர்.

* கார்த்திகை தீபத்திற்கு மறுநாளும், தை மூன்றாம் தேதியும் அண்ணாமலையார் கிரிவலம் வருவார்.

* மலை மீதுள்ள முலைப்பால் தீர்த்தத்தை சீர்படுத்தியவர் நரிக்குட்டி சுவாமிகள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்வதரான இவர் சிவபக்தராக மாறினார். தமிழிலும் பேசுவார்.

* தென்கைலாயம் என திருவண்ணாமலைக்கு பெயர் உண்டு.

* இங்கிலாந்து அறிஞர் பால்பிரண்டன் எழுதிய நுாலில் அண்ணாமலையார், மகான் ரமணர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

* திருவெம்பாவை பாடலை மாணிக்கவாசகர் பாடிய தலம் திருவண்ணாமலை.

* அண்ணாமலை கோயிலுக்கு 100 ஏக்கர் நிலத்தை தர்மகர்த்தா தனக்கோட்டி முதலியார் தானமாக தந்தார்.

* முன்பு காடாக இருந்த திருவண்ணாமலையில் வனவிலங்குகள் வாழ்ந்தன.

* திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்பாக முதல்நாள் துர்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடக்கிறது.

* திருவண்ணாமலை கோயிலுக்கு இரண்டு தலபுராணங்கள் உண்டு. 1. அருணகிரி புராணத்தை எழுதியவர் கண்கட்டி மறைஞானசம்பந்தர்.

2. அருணாசல புராணத்தை எழுதியவர் சைவ எல்லப்ப நாவலர்.

* விசிறி சாமியார் என்னும் யோகி ராம்சுரத்குமார், இந்த ஊரில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முகப்பில் தங்கியிருந்தார்.

* சம்பந்த விநாயகர் கோயிலுக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், மன்னர்கள் முடிசூடுவது வழக்கம். அண்ணாமலையார் சன்னதியில் முடிசூட்டும் வழக்கமில்லை.

* புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டாலஜி என்ற நிறுவனம், திருவண்ணாமலை கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்து ஆங்கிலம், பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளது.






      Dinamalar