sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பாவம் போக்குபவர்

/

பாவம் போக்குபவர்

பாவம் போக்குபவர்

பாவம் போக்குபவர்


ADDED : ஆக 30, 2024 11:05 AM

Google News

ADDED : ஆக 30, 2024 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்றிக்கண்ணுடன் சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். ஆனால் ஐந்து முகங்கள் கொண்டவர் அவர் என்பது தெரியுமா... நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் இவருக்கு கோயில் உள்ளது. பசுபதிநாதரை தரிசித்தால் பாவம் போகும்.

பசுக்கள் என்றால் உயிர்கள். இந்த உயிர்களைப் படைத்து, காத்து, அழிக்கும் எஜமானராக இருப்பவர் சிவன். இதனால் அவருக்கு 'பசுபதி' என பெயருண்டு. திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களுடன், மேல் நோக்கிய ஒரு முகத்தையும் சேர்த்து ஐந்துமுகம் கொண்டவர் இவர். நேபாளத்தின் லிச்சாவி வம்சாவளியைச் சேர்ந்த மன்னர் சுபஸ்பதேவர் என்பவர் 464ல் பசுபதிநாதர் கோயிலைக் கட்டினார். பகோடா கட்டிடக்கலையால் ஆன இக்கோயில் கனசதுர வடிவம் கொண்டது. கோயில் முழுவதும் தாமிர மேற்கூரையுடன் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நான்கு முதன்மை வாயில்களும் வெள்ளியால் ஆனவை. மூலவர் பசுபதிநாதர் ஆறடி உயரம், ஆறடி சுற்றளவு கொண்ட கருங்கல்லால் ஆனவர்.

சிவனின் நான்கு முகங்களுக்கு எதிரேயும் தனித்தனியாக நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றின் அருகிலும் பண்டாக்கள் எனப்படும் பூஜாரிகள் இருக்கின்றனர். கோயில் எங்கும் பக்தர்கள் அமர்ந்தபடி ருத்ர ஜபம் செய்கின்றனர். சிவன் எதிரில் பித்தளையால் ஆன பெரிய நந்தி சிலை உள்ளது.

பசுபதிநாதர் கோயிலின் இடப்புறம் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றை சுற்றி வருவதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பின்புறம் பாசுமதி நதி ஓடுகிறது.

இதில் நீராட படித்துறைகள் உள்ளன. அதில் ஆர்ய காட் படித்துறையில் இறந்தவர்களின் உடலை தீயிட்டு எரித்து அஸ்தியை ஆற்றில் கரைக்கின்றனர். கங்கை கரையில் உள்ள மணிகர்ணிகா கட்டம் போல முன்னோர் சடங்குகள் இங்கு நடக்கிறது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் இக்கோயிலும் ஒன்று.

பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் புத்தநீலகண்ட் என்னும் விஷ்ணு கோயில் உள்ளது. ஆதிசேஷன் மீது சங்கு சக்கரம் தாங்கியபடி சயனக் கோலத்தில் இருக்கிறார். விவசாயி ஒருவரின் கனவில் தோன்றி, சிலைவடிவில் புதைந்த தனக்கு பிரதிஷ்டை செய்ய மகாவிஷ்ணு உத்தரவிடவே கோயில் கட்டப்பட்டது.

எப்படி செல்வது : * பெங்களூருவில் இருந்து 2355 கி.மீ., * டில்லியில் இருந்து 1144 கி.மீ.,

பெங்களூரு, டில்லியில் இருந்து விமானம் உள்ளது.

விசேஷ நாள்: மகர சங்கராந்தி, மகாசிவராத்திரி, ரட்ஷா பந்தன், மாத பவுர்ணமி.

நேரம்: அதிகாலை 4:00 - இரவு 7:00 மணி

அருகிலுள்ள கோயில் : குகேஸ்வரி 1 கி.மீ., (மனபலம் அதிகரிக்க...)

நேரம்: காலை 7:30 - இரவு 7:30 மணி






      Dinamalar
      Follow us
      Arattai