ADDED : செப் 20, 2024 10:23 AM

ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த ராமர், காஞ்சிபுரம் அருகிலுள்ள திருப்புட்குழியில் விஜயராகவர் என்னும் பெயரில் இருக்கிறார். மகாளய பட்ச காலத்தில் இங்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர் ஆசி கிடைக்கும்.
சீதையைக் கடத்திச் சென்ற ராவணனை பறவை அரசனான ஜடாயு தடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் இறக்கைகளை வாளால் ராவணன் வெட்ட, கீழே விழுந்தது. உயிருக்குப் போராடிய ஜடாயுவை அந்த வழியாக வந்த ராம, லட்சுமணர் கண்டனர். அவர்களிடம் ராவணனால் சீதை கடத்தப்பட்டதை தெரிவித்த ஜடாயு, தனக்கு ஈமக்கிரியை செய்யவும் கேட்டுக் கொண்டு உயிர் விட்டது. அதனடிப்படையில் இங்கு மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்த கோலத்தில் இருக்கிறார்.
'திரு' என்றால் உயர்ந்த 'புள்' என்றால் பறவை அதாவது ஜடாயு. 'குழி' என்றால் ஈமக்கிரியைக்கு வெட்டும் குழி. இதனால் இத்தலம் 'திருப்புட்குழி' என பெயர் பெற்றது. ராமர் அம்பினால் உருவாக்கிய தீர்த்தமாக 'ஜடாயு புஷ்கரணி' உள்ளது. தனி சன்னதியில் இருக்கும் மரகதவல்லித்தாயார் குழந்தைவரம் தருபவளாக இருக்கிறாள். திருவீதி புறப்பாட்டின் போது ஜடாயுவுக்கு முதல் மரியாதை நடக்கிறது.
புரட்டாசி மகாளய அமாவாசையன்று வழிபட்டால் இரட்டிப்பு பலன் அளிக்கும்.
எப்படி செல்வது:
சென்னை - வேலுார் செல்லும் வழியில் 80 கி.மீ.,
காஞ்சிபுரம்- வேலுார் செல்லும் வழியில் 13 கி.மீ.,
விசேஷ நாள்:ஆவணி பவித்ர உற்ஸவம், தை அமாவாசை தெப்பம், மாசிபிரம்மோற்ஸவம், நவராத்திரி, திருக்கார்த்திகை.
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 044 - 2724 6501
அருகிலுள்ள கோயில் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் 15 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)
நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மதியம் 3:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 044 - 2726 9773