
கிரகபாதிப்பு குறைய புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரத்திலுள்ள காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றுங்கள்.
ராமர் வனவாசம் வந்த போது ரிஷிகளுடன் தங்கியிருந்தார். அதில் ஒருவரான துர்வாச மகரிஷி நெல்லி வனமான இப்பகுதியில் சுயம்புலிங்கத்தை வழிபட்டு வந்தார். அந்த லிங்கம் காலப்போக்கில் மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் பசு ஒன்றின் மூலம் சிவலிங்கம் இருப்பதை அறிந்தனர். பின்னர் இங்கு பாண்டிய மன்னர் கோயில் கட்டினார். இவரது சின்னமான மீன் கருவறையில் உள்ளது. சுவாமிக்கு பாதாளேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என்றும் பெயருண்டு.
துர்வாசர் தவம் செய்ததால் இத்தலம் 'துர்வாசபுரம்' ஆனது. கருவறையில் முன் பத்மாசனத்தில் துர்வாசர் இருக்கிறார்.
வியாழன் அன்று மாணவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
இங்கு பைரவர் நின்ற கோலத்தில் கையில் கபாலம், பாம்பு, திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி நாய் வாகனத்துடன் இருக்கிறார். தேய்பிறை அஷ்டமியன்று விசேஷ யாகம் நடக்கிறது. கிரக தோஷம், கடன்பிரச்னை, மனக்குழப்பம் தீர அரளிமாலை சாத்துகின்றனர்.
சிவன் கோயிலாக இருந்தாலும் 'பைரவர் கோயில்' என்றே அழைக்கின்றனர். தெற்கு நோக்கி இருக்கும் பாகம்பிரியாள் அம்மனை, பவுர்ணமியன்று விரதமிருந்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.
எப்படி செல்வது: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து 4 கி.மீ.,
விசேஷ நாள்: சம்பக சஷ்டி, ஆனித்திருமஞ்சனம், திரியம்பக அஷ்டமி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 94427 62219
அருகிலுள்ள கோயில்: கண்ணனுார் பாலசுப்பிரமணியர் 2 கி.மீ., (குழந்தைப்பேறு கிடைக்க...)
நேரம்: காலை 10:30 - 11:30 மணி
தொடர்புக்கு: 94427 62219