sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

புகழ் பெற்ற கருடன் சன்னிதிகள்

/

புகழ் பெற்ற கருடன் சன்னிதிகள்

புகழ் பெற்ற கருடன் சன்னிதிகள்

புகழ் பெற்ற கருடன் சன்னிதிகள்


ADDED : ஆக 05, 2016 09:34 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முக்கிய பெருமாள் கோவில்களில், கருடனுக்கு தனி சன்னிதி உள்ளது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மிக உயரமான கருடன் சன்னிதி உள்ளது. இவருக்கு கட்டப்படும் வஸ்திரம் மிகப்பெரியது. இங்குள்ள கருட மண்டபத்தில் 212 தூண்கள் உள்ளன.

* கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் நறையூர் நம்பி கோவிலில் அமைந்துள்ள கல் கருடன்.

* சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார்.

* திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் தவம் செய்யும் நிலையில் கருடன் இருக்கிறார். இது தவிர நின்ற நிலையிலும் ஒரு கருடாழ்வார் கருவறையின் பின்பக்கம் உள்ளார்.

* மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூர் தேவாதிராஜன் கோவிலில் மூலவர் தேவராஜன் கருட விமானத்தின் கீழிருந்தவாறு அருள்பாலிக்கிறார். இந்தக் கருடவிமானம் தேரழுந்தூர் ஆமருவியப்பனுக்கு கருடனால் வழங்கப்பட்டதாகும்.

* மைசூரு அருகே அமைந்துள்ள மேல்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் உள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படும் வைரமுடி கருடனால் வழங்கப்பட்டது என்பர்.






      Dinamalar
      Follow us